செங்கல்பட்டு, ஜன. 5- செங்கல்பட்டு மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை புதனன்று (ஜன. 5) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ் பெற்றுக் கொண்டார். இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13,83,607, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 14,12,648 மற்றும் மூன்றாம் பாலினத்தினர் எண்ணிக்கை-450 என மொத்த வாக்கா ளர்களின் எண்ணிக்கை 27,96,705 ஆகும். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 7லட்சத்து 11 ஆயிரத்தி 755 பேர் உள்ளனர்..சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் புதியதாக 55,957 நபர்கள் தங்களை வாக்காளர்க ளாக பதிவு செய்துள்ளனர் . இந்நிகழ்ச்சியில், மாவட்ட நேர்முக உதவியாளர் செல்வம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மரு.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி, தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் வேலன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.