districts

img

2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்பு வணிகர் சங்கப் பிரதிநிதி

2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்பு வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் வெள்ளியன்று (ஜன. 19) மாநில அரசு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரிடம் அளித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, திருச்சி மாவட்டத் தலைவர் வி.ஸ்ரீதர், வேலூர் மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு ஆகியோர் உடனிருந்தனர்.