districts

img

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி 200 நாள் வேலை

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி 200 நாள் வேலையும் தினக்கூலி ரூ.600வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் ஆர்.லெனின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தசாமி, பொருளாளர் செல்வராசு துணைத் தலைவர் வேலு, நிர்வாகிகள் சேகர், வரதராஜு, கல்பனா, எத்திராஜ், வெங்கடாசலம், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.