தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 15ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூன் 4) போரூரில் தொடங்கியது. மாவட்டத் தலைவர் கவிஞர் சி.எம்.குமார் தலைமையில் நடைபெற்ற பொதுமாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் நாடகவியலாளர் பிரளயன் பேசினார். நிர்வாகிகள் மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன், செயற்குழு உறுப்பினர் சைதைஜெ., மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் க.மலர்விழி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்