districts

1 கோலுக்கு 11 மரக்கன்றுகள்

சென்னை,ஆக.3-

     ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி  சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வியாழனன்று (ஆக.3) தொடங்கியது.

    இந்நிலையில், இந்த போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காடுகளின் நிலப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.