மாமல்லபுரம், பிப்.8 - சென்னையிலிருந்து குஜராத் பூங்காவிற்கு ஆயி ரம் முதலைகள் கொண்டு செல்லப்பட உள்ளன. சென்னை வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை யில் முதலை பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு இனங்களை சேர்ந்த முதலை கள் உள்ளன. இதில் ஒரு பகுதி முதலைகளை விலங்கு கள் பாதுகாப்பு சட்டத்தின் படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலைப் பண்ணை நிர்வா கத்தினர் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தது. அதில் 350 ஆண் முதலை கள், 650 பெண் முதலைகள் என 1000 முதலைகளை இட மாற்றம் செய்ய அனுமதி அளித்தது. இந்த முதலை களை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலை யன்ஸ் உயிரியல் பூங்கா விற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில மாதங்களாக முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குஜராத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முதலைகளை பெட்டி யில் அடைப்பதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப் பட்டு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படு கிறது. இது தொடர்பாக வனத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பண்ணையில் கூடுதல் எண்ணிக்கையிலான முத லைகள் இருந்தன. எனவே, முதலைகளை இயற்கை யான வாழ்விடங்களில் மறுவாழ்வு செய்ய அதன் நிர்வாகத்தினர் வனத் துறைக்கு கடிதம் எழுதி இருந்தனர். அதன்படி, 1000 முதலைகள் இங்கிருந்து குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. விலங்குகளின் ஆரோக் கியம், நல்வாழ்வுக்கு முன்னு ரிமை அளிக்கப்படுகிறது என்றார்.