districts

img

சேலம் மாவட்டம், சேந்தமங்கம் காவல் நிலையத்தில் 100 விழுக்காடு

சேலம் மாவட்டம், சேந்தமங்கம் காவல் நிலையத்தில் 100 விழுக்காடு மாற்றுத்திறனாளி ஏ.பிரபாகரன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காவல்நிலைய படுகொலைக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை கோரியும்,  கொல்லப்பட்ட பிரபாகரன் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு சனிக்கிழமையன்று திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கி.ராதை, செல்வகுமாரி, சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல், வெங்கடய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.