districts

கொள்ளிடம் அருகே சாலை விரிவாக்க பணி விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சீர்காழி. ஜன. 27 கொள்ளிடம் அருகே சாலை விரிவாக்கப் பணியை விவசாயி கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய் மரம் கிராமத்தில் விழுப்புரத்தி லிருந்து நாகப்பட்டினம் செல்ல நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி புதனன்று  நடைபெறத் துவங்கியது. தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் அதிகாரி கள் ஊழியர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் இயந்திரத்துடன் சாலை அமைக் கும் பணியை துவக்கினர். விவ சாய நிலங்கள் தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள  நிலையில் இந்த பணி துவங்கிய தால் அப்பகுதியைச் சேர்ந்த கடுக் காய் மரம்,புத்தூர்,குமிளங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும்  விவசாயிகள் நேற்று திரண்டு வந்து சாலை விரிவாக்கப் பணி யில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் பொறுப்பு இன்ஸ் பெக்டர் மணிமாறன், கொள்ளி டம் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டகணேஷ் மற்றும் போலீ சார் அதிகாரிகள் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து விவசாயிக ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது விவசாயி கள் கூறுகையில் சாலை அமைக்கும் பணிக்காக உரிய உத்தரவு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் நிலங்களை கையகப்படுத்துவ தற்கு முன்பு அதிகாரிகள் விவசா யிகளிடம் சாதாரணமாக விளை நிலங்களின் விற்பனை மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக  விலை,  சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அதனை செய்யாமலும், உரிய உத்தரவு விவசாயிகளு க்கு வழங்காமலும் சாலை அமைக்கும் பணியை பொக் லைன் எந்திரம் மூலம் துவங்கி யுள்ளனர். இதற்கான உத்தரவை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்தால்தான் சாலை அமைக்கும் பணியை தொடர லாம் என்றனர்.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தற்போது அர சுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் மட்டுமே சாலை  அமைக்கும் பணி துவங்கி யுள்ளது. விவசாய நிலங்களில் சாலை அமைக்கும் பணி உரிய உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே தொடரும் என்றனர்.  அதனைத் தொடர்ந்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் மட்டும் சாலை அமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும் பணி நடைபெற்றது. சாலை அமைக்கும் பணியை விவசாயிகள் திரண்டு வந்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

;