சிவகாசி, ஜூன் 7- சிவகாசியில் சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் வெள்ளி விழாப் பேரவை நடை பெற்றது. தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் நினைவரங்கில் நடைபெற்ற பேர வைக்கு மண்டலத் தலைவர் ஏ.சுந்தர ராஜ் தலைமை தாங்கினார். 25 ஆண்டு கால போராட்ட வரலாற்றின் கண்காட்சி யை முன்னாள் மண்டல துணைத் தலை வர் எஸ்.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அஞ்சலித் தீர்மானத்தை எஸ். ஆறுமுகம் வாசித்தார். பி.செல்வக் குமார் வரவேற்றார். சம்மேளன உதவித் தலைவர் வி.பிச்சை துவக்கவுரை யாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செய லாளர் எம்.வெள்ளைத்துரை, வரவு செலவு அறிக்கையை வி.சின்னத்தம்பி ஆகியோர் சமர்பித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா, ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் செயலாளர் பி.தங்கப்பழம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சம் மேளன பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார் நிறைவுரையாற்றினார். முடிவில் எஸ்.திருப்பதி நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மண்டலத் தலைவராக ஏ.சுந்தர ராஜ், பொதுச் செயலாளராக எம்.வெள்ளைத்துரை, பொருளாளராக எம்.கார்மேகம், உதவித் தலைவர்களாக ஜி.வேலுச்சாமி, எம்.மகாலட்சுமி, எம்.முத்துராஜ், டி.சன்னாசி, பி.பாண்டியன், கே.தமிரசன், ஆர்.கண்ணன், எஸ்.ஆறு முகம், எம்.முத்தமிழ்செல்வன் ஆகியோ ரும், செயலாளர்களாக சி.பெரியசாமி, எம்.முனீஸ்வரன், கே.ரமேஷ்பிரபு, பி. வீரராகவன், ஜி.திருப்பதி, என்.சர வணன், ஜி.ராஜா, பி.செல்வக்குமார், கே.ஜீவானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.