சிவகங்கை, ஜன.29- காளையார்கோவில் பகுதியில் விளைய வைக்கப்பட்டுள்ள ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஒன்றிய செயலாளர் தென்னரசு மாவட்ட ஆட்சியரிடம் கூறுகை யில், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி களிலும் விவசாயிகளால் அதிகமாக விளைய வைக்கப்பட்டுள்ள ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். உரம் மற்றும் இடுபொருள்களின் அள வுக்கதிகமான விலையேற்றத்தினால் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே, விவசாயிகளின் நலனை கருத் தில் கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலையில் அரசே கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள் ளார்.