திருப்பூர், பிப். 25- திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிறப்புப் பேரவை செவ்வாயன்று மாவட்டத் தலைவர் எஸ் . அருள் தலைமையில் பி.ஆர்.நிலையத்தில் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கார்த்தி, மாநிலச்செயலாளர் சிங்காரவேலன் ஆகியோர் பங்கேற்ற னர். பேரவையில், திருப்பூர் மாவட்டச் செயலாளராக பால முரளி, பொருளாளராக சிந்தன், துணைச் செயலாளராக நிரு பன் சக்கரவர்த்தி, செயற்குழு உறுப்பினர்களாக பிரவீன், சுதா, மாவட்டக்குழு உறுப்பினராக செல்லமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.