districts

img

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

தருமபுரி, மே 31- மோளையானூர் பேருந்து நிறுத் தம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அப் பகுதி  பெண்கள் மதுபானக் கடையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள மோளையானூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையின் காரணமாக  கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மற் றும்  பள்ளிக்கு செல்லும் மாணவிகள் உள்ளிட்டோர்  பெரும் சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். இதையடுத்து அப் பகுதி  பெண்கள் திடீரென டாஸ்மாக் கடை முன்பு கூடி கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய  காவல் ஆய்வாளர் லதா தலை மையிலான காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று போராட்டத்தில்  ஈடு பட்ட  பெண்களிடம், இப்பிரச்சனை தொடர்பாக  அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.ஆனால், இதனை ஏற்க மறுத்த பெண் கள்,  கடையை மூடும் வரை தாங் கள் இங்கிருந்து செல்ல போவதில்லை  எனக்கூறி போராட்டத்தை தொடர்ந் தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்  நிலவிவருகிறது.