districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து: பெண் பலி ஆலை உரிமையாளர் கைது

சேலம், மார்ச் 24- எடப்பாடி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில்  பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமை யாளரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் அருகே உள்ள முனியம்பட்டி கிராமம், சன்னி யாசி கடை பகுதியில் குமார் (40) என்பவருக்கு சொந்தமான  பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அதே பகுதியைச் சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளாளபுரம் வாணக்கார தெருவைச் சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர்  தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர். இந்நிலையில், அந்த ஆலையிலிருந்த பட்டாசுகள் எதிர்பாராமல் வெடித்து  சிதறிய நிலையில், அங்கு பணியில் இருந்த அமுதா தீயில்  கருகி உயிரிழந்தார்.  பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட  வேடப்பன், சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவ  இடத்தில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதி காரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரி மையாளர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல், விபத்து ஏற்படும் வகையில் பட்டாசு ஆலையை நடத்தி வந்தது விசார ணையில் தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தது போன்ற காரணங்களுக்காக ஆலையின் உரிமை யாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை  கைது செய்தனர்.

அனுமதியின்றி சிலை வைப்பு - வழக்கு

தருமபுரி, மார்ச் 24- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாசிக் கவுண்டனூர் கிராமத்தில் ஒன்றிய ஆணையாளர் பெயரில்  பதிவு செய்த நிலத்தில் அனுமதி இன்றி 7 அடி உயரம் 4 அடி  அகலத்தில் வன்னிய ராஜா சிலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி  அலுவலர் கிருஷ்ணன் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி  அனுமதியின்றி சிலை வைத்ததாக வாசிக்கவுண்டனூரை சேர்ந்த பாப்பி ரெட்டிப்பட்டி பா.ம.க. மேற்கு ஒன்றிய செய லாளர் சுப்பிரமணி (35), வெங்கடேசன் (52), ராஜேந்திரன் (60),  இளங்கோ (45), மகாராஜன் (60) ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பொய் வழக்கு பதிந்தால் தற்கொலை செய்வோம் காவல் துறைக்கு திருநங்கைகள் எச்சரிக்கை

கோவை, மார்ச் 24- காவல் துறையினர் தொடர்ந்து பொய்  வழக்கு பதிந்தால் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பே தற்கொலை செய்து  கொள்வோம் என திருநங்கைகள் தெரிவித் துள்ளனர்.   கோவை, டாடாபாத் பகுதியில் காட்டூர்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நித்யா என்ற திரு நங்கை வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்டு  கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியி லிருந்த பெண் காவலர் ஒருவர் அவரிடம், இரவு நேரத்தில் பணம் வசூலிக்கக்கூடாது என அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட திரு நங்கைகள் காவல் ரோந்து வாகனத்தை  சேதப்படுத்தியதாகவும், தன்னையும்  தாக்கியதாகவும் கூறி பெண் காவலர், நித் தியா உட்பட 10க்கும் மேற்பட்ட திருநங்கை கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தார். இவ் வழக்கு விசாரணை காவல் நிலையத்தில் நடைபெற்று, வருவதாக தெரிகிறது. அப் போது விசாரணைக்காக சென்ற திருநங்கை களை காவல்துறையினர் அவமரியாதை யுடன் நடத்தியதாகவும், அந்தப் பெண் காவ லரை நாங்கள் தாக்காமலேயே தாக்கியதாக பொய் வழக்குப் பதிவு செய்வதாகவும்,   நியாயம் வேண்டுமென கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரு நங்கைகள் மனு அளித்தனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறுகை யில், காவல் துறையினர் தொடர்ந்து தங்கள்  மீது பொய் வழக்கு போடுவதாகவும், இதே  நிலைத் தொடர்ந்தால், நாங்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை  செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். எனவே, தங்கள் மீது பொய்  வழக்கு போட வேண்டாம் என கேட்டுக் கொண்ட திருநங்கைகள் தங்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பை உருவாக்கி தர  மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தவறி விழுந்த முதியவர் பலி

அவிநாசி, மார்ச் 24- குன்னத்தூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் வெள்ளியன்று உயிரிழந்தார். குன்னத்தூர், இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிர மணி(65). இவர் குன்னத்தூர் அருகே கமலாங்குட்டை சாமி யப்பன் கார்டன் பகுதியில் பனை மரங்களை குத்தகைக்கு  எடுத்து பதநீர் இறக்கி, கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து  வந்தார். இவர் ஞாயிறன்று பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரி ழந்தார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

திருப்பூர் - பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளை  இடைநில்லா பேருந்துகளாக மாற்றியதால் மக்கள் அவதி

திருப்பூர், மார்ச் 24- திருப்பூர் - பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளை இடைநில்லா பேருந்து களாக மாற்றி அதிக  கட்டணத்துடன் இயக்குவதை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய குழு செயலாளர் பரம சிவம் அளித்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது, திருப்பூரிலிருந்து பல்லடம்  வழியாக பொள்ளாச்சிக்கு ஆறு பேருந் துகள் இயக்கப்பட்டு கொண்டிருந்தது. நாள் ஒன்றுக்கு நான்கு முதல் எட்டு நடைகள் வரை ஏறத்தாழ 24 நடை இயக்கப்பட்டது. தற்போது இது இடை  நில்லா பேருந்தாக கூடுதல் கட்ட ணத்துடன் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை நம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வீரபாண்டி, அருள்புரம், பல்லடம், காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, காட்டம்பட்டி, நக மம், புளியம்பட்டி, கோட்டம்பட்டி போன்ற முக்கிய பேருந்து நிறுத்தங்க ளில் பேருந்துகள் நிற்காமல் செல்கி றது. இதனால், இப்பகுதிகளை சுற்றி யுள்ள கிராம மக்கள் திருப்பூர், பொள் ளாச்சி, கல்வி நிறுவனங்கள், வேலை நிறுவனங்கள் உள்ளிட்ட இதர சேவை களுக்கு வந்து செல்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஏற்க னவே இயக்கப்பட்ட பேருந்துகளை பழைய முறைப்படி அனைத்து நிறுத் தங்களிலும் நின்று செல்ல அரசு போக்கு வரத்து கழகம் நடவடிக்கை  எடுக்க வேண் டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழில் அமைப்புகள் ஒன்றுபட்டு குரல்கொடுக்க  டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் வேண்டுகோள்

திருப்பூர், மார்ச் 24 - திருப்பூர் பின்னலாடை தொழி லில் உண்மையான நெருக்கடி நிலை  குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று  திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தி யாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி. முத்துரத்தினம் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பின்னலாடை தொழிலில் ஏற் பட்ட பல்வேறு நெருக்கடியினால் 70 சதவிகிதம் வேலையில்லாமல் உள் ளோம். இதற்கு காரணம் பத்தாண்டு களாக உள்ள பல்வேறு பிரச்சனை கள்தான். தொழில் செய்ய இயலாமல்  நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள் ளது. இப்போது புதிதாக வெளி மாநில  தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள். நம் தொழி லில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை  மாநில அரசுக்கோ, மத்திய அர சுக்கோ தெரியப்படுத்துவதில்லை. அதற்கு நாமும் தயார் இல்லை. திருப் பூர் பிரச்சனை இல்லாமல் தொழில் நன்றாக நடைபெறுகிறது என்று அரசு  நினைக்கிறது. ஆனால் திருப்பூரில் 90% சிறு, குறு தொழில் சார்ந்தவர்கள்  அவர்களுடைய பாதிப்பு அரசுக்கு  தெரியவில்லை. பெரிய நிறுவனங் கள் புள்ளி விவரங்களை மட்டும்  அரசுக்கு தெரிவிக்கிறது. திருப்பூரில்  மட்டும் தொழில் அமைப்புகள் அதிக மாக உள்ளது. தமிழக அரசை சந்திக்க  யாரும் விரும்பவில்லை. அரசு தரப் பில் இவர்களுக்கு தகவல்கள் கிடைப்பதும் இல்லை.  மார்ச் 22 ஆம் தேதி புதன்கிழமை  மாலை 5 மணி அளவில் சென்னையில்  மத்திய மாநில அரசு மெகா பார்க் துவக்க விழா நடைபெற்றது. அதில்  மத்திய அமைச்சர்கள், தமிழக  முதல்வர், தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து  கொண்ட ஈரோடு அமைப்புகள், சேலம் அமைப்புகள், கரூர் அமைப்பு கள், நெசவாளர்கள் அமைப்புகள், பவர்லூம் அமைப்புகள், அனைத்து அமைப்புகளும் முழுமையாக கலந்து கொண்டார்கள். ஆனால் திருப்பூர் உலகளவில் ஏற்று மதியும், உள்நாட்டு உற்பத்தியும் கிட் டத்தட்ட ரூ.65,000 கோடி வருடம் ஒன் றுக்கு செய்கிறோம். ஆனால் திருப் பூரில் இருந்து எந்த அமைப்புகளும் கலந்து கொள்ள வில்லை. பியோ  தலைவர் சக்திவேல் கலந்து கொண் டார். டீமா கலந்து கொண்டது. வேறு  எந்த அமைப்புகளும் கலந்து கொள்ள வில்லை. இப்படி இருந்தால்  நம் பிரச்சனை அரசுக்கு தெரியாது. ஈரோடு, சேலம், கரூர் போல நம்ம அமைப்புகளும், ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நம் தேவை களை அரசிடம் பெற முடியும். பிரச்ச னைகளை அதிகமாக சந்தித்து வரு வது நம் பின்னலாடை தொழில். ஆனால் ஒரு பிரச்சனையும் இல்லா தது போல் நம் செயல்பாடு உள்ளது.  இது பின்னலாடை தொழிலுக்கு அழிவை உண்டாக்கும். ஈரோடு, கரூர், சேலம் அமைப்புகள் ஒற்றுமை களை பாருங்கள். அவர்கள் தேவை களை அரசு உடனடியாக செய்து தரு கிறார்கள். அந்த ஒற்றுமை நம்மிடம்  இல்லை. ஒற்றுமையே நம் தொழி லைப் பாதுகாக்க முடியும். ஒன்று  சேர்வோம் நம் தொழிலை பாதுகாப் போம் என்று திருப்பூர் ஏற்றுமதி யாளர் உற்பத்தியாளர் சங்க தலை வர் எம்.பி.முத்துரத்தினம் கோரியுள் ளார்.

ரூ. 10 லட்சம் உதவி   

அவிநாசி, மார்ச் 24- பொங்கலூர் அரசு தொடக் கப்பள்ளிக்கு ரூ.10 லட்சம்  மதிப்பில் உதவி வழங்கிய  தனியார் நிறுவனத்தாருக்கு பாராட்டு விழா வெள்ளி யன்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம்,  பொங்கலூர் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளிக்கு எல்.ஜி.பாலகிருஷ்ணன் பிர தர்ஸ் நிறுவனத்தினர் முதற் கட்டமாக மேசை, நாற்காலி,  குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட  பொருட்களை வழங்கியும், வகுப்பறைக்கு தரைத்தளம்  அமைத்தும் கொடுத்துள்ள னர். மேலும், தேர்வு செய்யப் பட்ட இடத்தில், இருபாலர் கழிப்பறை அமைக்கும் பணி  தொடக்கவுள்ளனர். மொத் தம் ரூ.10 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு உதவிய அந் நிறுவனத்தாருக்கு வெள் ளியன்று பாராட்டு விழா நடை பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு  ஊராட்சி  மன்றத் தலைவர் விமலா  செல்வராஜ் தலைமை வகித் தார். துணைத் தலைவர் ராதா மணி கிருஷ்ணசாமி முன் னிலை வகித்தார். தலைமை யாசிரியை ஜோதிலட்சுமி வர வேற்றார். எல்ஜி.பாலகி ருஷ்ணன் பிரதர்ஸ் நிறுவன சீனியர் பொது மேலாளர் செந்தில்குமார், பொது மேலாளர் ரமேஷ்குமார், மேனேஜிங் டைரக்டர் பிரபா கரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வார்டு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ராஜேஸ்வரி நடராஜ், தேவி வேலு மணி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

மார்ச் 28 ஆம் தேதி உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

உடுமலை, மார்ச் 24- உடுமலை கோட்டாட்சியர் அலுவக கூட்டரங்கில்  மார்ச் 28 ஆம் தேதி, காலை 11  மணிக்கு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டசியர் ஜஸ்வந்த் கண்ணன் தலை மையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து துறை அரசு  அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். உடுமலை மற் றும் மடத்துக்குளம் தாலுகா  விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

தருமபுரி, மார்ச் 24- பாலக்கோடு பேரூராட்சிக்கு வரி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் வரி பாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதனை வசூல் செய்யும் விதமாக ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் வரி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சில வணிக நிறுவனங்கள் சொத்து வரி தண்ணீர் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதனை பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமையில் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

நாமக்கல்லில் குடிசைகளுக்கு தீ வைப்பு: தனிப்படை அமைப்பு

நாமக்கல், மார்ச் 24- பரமத்திவேலூர் அருகே தொழி லாளர்கள் குடிசைகளுக்கு தீ வைக் கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வர்களை பிடிக்க காவல் துறை சார் பில் தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே மார்ச் 15 ஆம் தேதி சரளை மேடு, புதுப்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட் டகை, அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடி சைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது  தொடர்பாக 6 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். இந்நிலையில், மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் ஜேடர்பாளை யம், சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி என்பவருக்கு சொந்த மான வெல்ல ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய அமைக்கப்பட்டிருந்த குடிசை வீடு கள், அதன் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிராக்டர்கள், கரும்பு வெட் டும் எந்திரம் ஆகியவற்றுக்கு அடை யாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த னர். இதேபோல் ஜேடர்பாளையம் -  நல்லூர் செல்லும் சாலையில் பழனிச் சாமி என்பவருக்கு சொந்தமான  கூரை வீட்டிற்கும், வடகரையாத்தூ ரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் பூங்கொடி வீட்டின் மீது மண்ணெண் ணெய் குண்டும் வீசப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து நாமக் கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், கோவை மேற்கு மண்டல  காவல் துறை தலைவர் சுதாகர், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நாமக் கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கலைச்செல்வன், துணை கண் காணிப்பாளர் கலையரசன் மற்றும்  வருவாய்த்துறையினர் நேரில் பார் வையிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்தும், தீ வைத்த நபர்கள் குறித் தும் விசாரணை மேற்கொண்டனர். இந் நிலையில் அந்த சம்பவங்களில் ஈடு பட்ட நபர்களை பிடிக்க பரமத்தி வேலூர் துணை காவல் கண்கா ணிப்பாளர் கலையரசன் தலைமை யில் ஆய்வாளர்கள் இந்திராணி, சுரேஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படா மல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

கோவையில் கொரோனா பரவல் 4 சதவிகிதமாக உயர்வு

கோவை, மார்ச் 24- தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இல் லாத நிலையில் இருந்து வந்தது. இதனால் தீவிர காய்ச்சல் பாதிப்பு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் இன்ப்ளு யன்ஸா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கி யது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்க மாநில அரசு சார்பில் சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டது. நடமாடும் மருத் துவக்குழுக்கள் அமைத்து ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்தி பரிசோதனை களை அதிகரிக்கவும் அறிவிக்கப்பட்டது. அதன் படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக்  குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100  மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனோ  பரிசோதனைக ளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டி லும் கோவையில் நோய் தொற்று பாதிப்பு அதி களவில் காணப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 கடந்து உள்ளது. கடந்த மார்ச்  15 ஆம் தேதி ஒரு சதவிகிதமாக இருந்த  கொரோனா நோய் தொற்று பரவல், தற்பொ ழுது 4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

நாமக்கல், மார்ச் 23- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ். கொங்கு நகர் பகு தியில் வசிக்கும் சுப்பிரமணி, மாதம்மாள் ஆகியோரின் மகன் குமரேசன் (22). இவர் செவித்திறன் குறைபாடு மற் றும் வாய் பேச முடியாத மாற் றுத்திறனாளி ஆவார். இந்நி லையில் புதனன்று காவேரி ஆர்எஸ் ரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ள, உற வினர் வீட்டிற்கு செல்வதற் காக ரயில்வே தண்டவா ளத்தை கடக்க குமரேசன் முயற்சி செய்தார். அப்பொ ழுது எதிரே வந்த சதாப்தி  ரயில் அவர் மீது மோதியது.  இதில் தூக்கி வீசப்பட்ட கும ரேசன், தலையில் பலத்த காய மடைந்து பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

 

;