காட்டெருமை தாக்கி பெண் காயம்
சேலம், ஆக.9- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 18 கி.மீ. தொலை வில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும் பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி வனத்தை ஒட்டியே உள்ளது. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராமத்திற்குள் வருவது வழக்கம். இந்நிலையில், செவ்வாயன்று மாலை கொலகூர் மிதுவ காடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டி ருந்தார். அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார். அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளை களை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இந்நிலையில், தனபாக்கியத்தை காட்டெருமை தாக்கு வதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட் டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தன பாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா வழக்கில் கைதானவர்கள் மீது குண்டாஸ்
தருமபுரி, ஆக.9- தருமபுரி பேருந்து நிலையம் வழியாக கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக, தருமபுரி மாவட்ட மது விலக்கு போலீசா ருக்கு கடந்த மாதம் 2ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, மது விலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதா, தலைமையிலான போலீசார் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, சந்தேகத் துக்கு இடமாக கையில் பையுடன் நின்றிருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களி டமிருந்து 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33), ரமேஷ் (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார் மீது ஏற்கனவே, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், சங்ககிரி காவல் நிலையத்தில் ஓரு அடி, தடி வழக்கும் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதே போல, ரமேஷ் மீது ஆந்திரா மாநிலத்தில் ஒரு கஞ்சா வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. எனவே, இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் பரிந்துரை செய் தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் இருவரை யும் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஆணை சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
வெறிச்சோடிய ஜவுளி சந்தை
ஈரோடு, ஆக.9- ஈரோடு ஜவுளி சந்தை செவ்வாயன்று வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் வாரந்தோறும் செவ் வாயன்று ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடை பெறும். இந்நிலையில் ஆடி மாதத்தையொட்டி, வியாபாரம் ஓரளவு நடை பெற்றது. தற்போது ஆடி 18 முடிவடைந்த நிலையில், மீண்டும் மந்த நிலையில் உள்ளது. செவ்வாயன்று கூடிய வார சந்தையில், வெளி மாநிலத் தில் இருந்து கேரளா வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. இதனால் மொத்த விற்பனை 10 சதவிகிதம் மட்டுமே நடை பெற்றது. சில்லரை விற்பனை 15 சதவிகிதம் மட்டுமே நடை பெற்றது. இதனால், வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆவணி மாதம் வரை வியாபாரம் சுமாராக இருக்கும் என்றும், அதன் பிறகு வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சாலை அமைக்காவிட்டால் மறியல்: சிபிஎம்
அவிநாசி, ஆக.9– சாலை வசதி கேட்டு ஒரு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும் நிறை வேற்றாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய கருணை பாளையம், சின்ன கருணைபாளையம் பகு திகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவிநாசி - மங்கலம் சாலை முதல் அய்யனார் கோவில் பாலம் வரை, பெரிய கருணைபாளையம் பேருந்து நிறுத்தம் முதல் நெடுஞ்சாலை வரை, அவி நாசி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு வாகன ஓட்டிகளுக்கு பிரதான சாலையாக உள்ளது. குடிநீர் குழாய் பதிப்ப தற்காக தோண்டப்பட்டதில் இச்சாலை சிதல மடைந்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பய ணிக்க நேரிடுகிறது. பழுதடைந்த சாலை களை உடனடியாக சீரமைத்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணை பாளையம் கிளை, ஊர் பொதுமக்கள் சார்பில் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய ஆணை யர், வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் ஜூலை 4 ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. ஆனால், இதுவரை கோரிக்கையை நிறைவேற்றாததால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆகஸ்ட் 29 ஆம் தேதி யன்று மறியல் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்துள்ளனர்.
ஆக.29ல் கோவைக்கு உள்ளூர் விடுமுறை
கோவை, ஆக.9- ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆக.29 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை நாள் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.29 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) கோவை மாவட்டத் தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறு வனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படு கிறது. இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்.2 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) முழு பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபிரியர்களால் மக்களுக்கு இடையூறு
உதகை, ஆக.9- உதகை அப்பர் பஜார் சாலையில் மதுபோதையில் சாலை யில் படுத்து, மது பிரியர்கள் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உதகை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு, மது பிரியர்கள் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற னர். குறிப்பாக, உதகை அப்பர் பஜார் பகுதியில் இரண்டு டாஸ் மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அப்பர் பஜார் சாலை யில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது குடித்துவிட்டு, சாலை யோரம் செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது மோதுவது போல் செல்கின்றனர். அப் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால், மது பிரியர் களின் தொந்தரவு தாங்காமல் பலர் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதேபோல் ஒரு சில நேரங்களில் போதை ஆசாமிகளுக் குள் தகராறு ஏற்பட்டு, அவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள் கின்றனர். இந்நிலையில், உதகை அப்பர் பஜார் சாலையில் போதையில் வந்த வாலிபர் ஒருவர் சாலையிலேயே சரிந்தார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த பொதுமக்கள் ஒரு வழியாக அவரை பேசி சமாதானம் செய்து சாலையோரம் கொண்டு சென்றனர். இதன் பின்னர் அவர் நிதானமாக கிளம்பி வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலையில் மது குடித்துவிட்டு, அடிக்கடி இதுபோல் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். மது போதையில் இருப்பதால் விபரீதம் ஏற்படும் என்பதால் அவர்களிடம் பேச வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
மின்தடை
கோவை, ஆக.9- கோவை, கோவில்பா ளையம் துணைமின் நிலை யத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால் சர்க்கார் சாமக் குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக் கம்பாளையம், வையம்பா ளையம், கோட்டைபாளை யம், கொண்டையம்பாளை யம், குன்னத்துார், காளி பாளையம் உள்ளிட்ட பகுதி களில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக் காது.