districts

img

தடையின்மை சான்று வழங்கக் கோரி நெசவாளர்கள் வட்டாட்சியர் அலுவலக்த்தில் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், மார்ச் 13- பல்லடத்தில் நெசவாளர் குடும் பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட் டாவிற்கு தடையின்மை சான்று  வழங்கக் கோரி சிஐடியூ கைத்தறி நெச வாளர் சங்கம் சார்பில் புதனன்று வட் டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. பல்லடம் வட்டம் வடுகபாளை யம் கிராமம் க.ச.எண் 60, 61ல் 293  கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்க ளுக்கு 1992 ஆம் ஆண்டில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஒரு  தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், நீதிமன்றம் பட்டா கொடுத்தது செல்லும் என்று  உத்தரவு வழங்கியது. இதன் அடிப்ப டையில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங் கள் குடிசைகள் அமைத்தும், ஓட்டு வீடுகள் கட்டியும் குடியேறினர். இதைத்தொடர்ந்து, அடிப்படை வச திகள் செய்வதற்கும், மின் இணைப்பு  பெறுவதற்கும் தடையின்மை சான்று  வேண்டுமென அரசுத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். நெசவா ளர்கள் தடையின்மை சான்று கேட்டு  தொடர்ச்சியாக சிஐடியூ கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளனர். இருப்பினும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  இந்நிலையில், திங்களன்று பட்டா வழங்கப்பட்ட பயனாளிக ளுக்கு இதுவரையில் தனிப்பட்ட பட்டா வழங்கப்படவில்லை. மின் இணைப்பு பெறுவது உள்ளிட்ட பணி களுக்கு தடையின்மை சான்று தேவைப்படுவதால் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என சிஐ டியூ கைத்தறி நெசவாளர் சங்கம்  சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அலு வலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பல்லடம் வட்டாட் சியர், துணை வட்டாட்சியர் ஆகி யோர் நடத்திய பேச்சு வார்த்தையில், இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுத லைப் பெற்று கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என உத்தரவாதம் அளித்ததைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கைத்தறி  நெசவாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் வைஸ் சுப்பிர மணி தலைமை வகித்தார். கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலா ளர் கனகராஜ், சிஐடியூ மாவட்டத்  தலைவர் சி.மூர்த்தி, மாவட்டத்  துணைத்தலைவர் கே.உன்னிகி ருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.