districts

img

பொது போக்குவரத்தை பலப்படுத்தி பாதுகாப்போம்

சேலம், ஜூலை 8- பொது போக்குவரத்தை பாது காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் சார்பில் வாயிற்கூட் டம் நடைபெற்றது. பொது போக்குவரத்தை பாது காக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா போக்குவரத்து தலைமை அலுவல கம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற் றது. அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் மண்டல தலைவர் கே.செம் பன் தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில், சங்கத்தின் மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கியும், போக் குவரத்து தொழிலாளர்களின் அடுத்த கட்ட வேலை நிறுத்த தயாரிப்புகள்  குறித்தும் தலைவர்கள் உரையாற் றினர். இதில் சிஐடியு சேலம் மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சேகர், துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார்,  சம்மேளனக்குழு உறுப்பினர் இள வழகன், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை பொதுச்செயலாளர் முருகேசன் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

கோவை

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வேளாங் கன்னிராஜ் தலைமை தாங்கினார். என்.முருகையா  சிறப்புரையாற்றி னார். இதில் பொதுச்செயலாளர் பரம சிவம், பொருளாளர் கோபால் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.