districts

img

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தர்ணா

ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல், டிஓடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஈரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாநில துணை செயலாளர் என்.குப்புசாமி, மாவட்ட தலைவர் எஸ்.மாணிக்கம், செயலாளர் பி.சின்னசாமி மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், பன்னீர்செல்வம், முருகேசன், மணி பாரதி, பாலு, சி.பரமசிவம், வி.மணியன் உள்ளிட்டேர்ர் உரையாற்றினர்.