கோவை ஏப்.23- கோவை நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை, சமுதாய நலக்கூட உணவு கூடம், கீழ்நிலை நீர் தேக்கத்தொட்டி ஆகிய வற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஞாயிறன்று மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் நியாய விலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. சொந்த கட்டடத்தில் நியாய விலைக்கடை செயல்பட அப்பகுதி பொதுமக் கள் பெரும் முயச்சி செய்து வந்தனர். இதனி டையே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தனது தொகுதி மேம்பாட்டு நிதி யில் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிய ரேசன் கடை கட்டப்பட்டது. இந்நிலையில், இப் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. பி.ஆர்.நடராஜன் எம்.பி., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி ஆகியோர் புதிய நியாய விலைக்கடை கட்ட டத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்தனர். அதேபோல காளப்பட்டியில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய சமுதாய நலக் கூடம், உணவுக்கூடம் இல்லாமல் செயல் பட்டு வந்தது. இதையடுத்து ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமுதாய நலக்கூட உணவுக்கூடம் கட்டப்பட்டது.
அதனையும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஞாயிறன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆண்டாகபாளை யம் கிராமத்தில் அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் குடிநீர் சேகரித்து வைக்க கீழ் நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டித்தர கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னிடம் அப்பகுதி பொதுமக்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தனர். கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவ தும் பரவி வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நிதி வழங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கீழ் நிலைத்தொட்டிக்கு ரூ.21.5 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு, கட்டட பணிகள் முடிவ டைந்த நிலையில், பி.ஆர்.நடராஜன் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில், சிபிஎம் மாமன்ற உறுப் பினர்கள் வி.ராமமூர்த்தி, சுமதி, பூபதி, கண் ணகி ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கோபால், கே.எஸ்.கனகராஜ், எஸ். எஸ்.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண் முகசுந்தரம், மாதர் சங்க மாவட்ட பொரு ளாளர் உஷா, திமுக வடக்கு மண்டல தலை வர் கதிர்வேல், திமுக மாநில நிர்வாகி ராஜீவ் காந்தி, 9 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அசோக் பாபு குட்டி, மாவட்ட கவுன்சிலர் அபி நயா ஆறுக்குட்டி, 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், வட்டாட்சியர் சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.