திருப்பூர், ஏப்.27- கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பி.பி.ஆர் ஒழிப்பு திட்டத்தில் செம்மறியாடு மற்றும் வெள் ளாடுகளுக்கு தடுப்பூசி போடப்படு வதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ் துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பி.பி.ஆர் ஒழிப்பு திட்டத்தில் 2024ஆம் ஆண்டு 3 ஆவது சுற்று தடுப்பூசி வருகிற 29ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு 4 மாதங்க ளுக்கு மேல் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு செலுத் தப்படவுள்ளது. கிராமப்புற வளர்ச்சி, விவசாயிக ளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இந்நிலையில், ஆட் டுக்கொல்லி நோய் என்று அழைக்கப்ப டும் பி.பி.ஆர் நோயானது செம்மறி யாடு மற்றும் வெள்ளாடுகளை அதிகம் தாக்கினால் கால்நடை வளர்போ ருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயானது வேகமாக பரவும் தன்மை யுடையது. நீர், காற்று, உயிர் திரவங்கள், பண்ணைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மூலமாக நோயானது பரவு கிறது. இந்த நோய் தாக்கினால் வயிற் றுப்போக்கு, கருச்சிதைவு ஏற்பட்டு இறுதியில் உயிருக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராம ரிப்புத்துறை சார்பில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவச மாக 100 சதவீதம் தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டு வருகிற 29ஆம் தேதி முதல் ஒரு மாதம் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்பு றங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ள அனைத்து செம்மறி யாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு கால் நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால் நடை வளர்போர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.