தருமபுரி, ஆக.10- கமுட்டேசன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண் டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின், 24 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம், செங்கொடிபுரத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பி.சுப்பிரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத்தலைவர் எம்.துரைசாமி வரவேற்றார். வேலூர் மண்டலச் செயலாளர் ஏ.ரங்கன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன், பொருளாளர் எம்.சின்னசாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில், பொதுத்துறையான மின்வாரியத்தை பாதுகாக்க வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, பணப்பயன்களை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள விதவை மகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். கமுட்டேசன் காலத்தை 12 ஆண்டு களாக குறைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அமைப்பின் தருமபுரி மாவட்டத் தலை வராக ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளராக ஜி.பி.விஜயன், பொருளாளராக எம்.சின்னசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஈரோடு மண்டலச் செயலா ளர் எம்.காளியப்பன் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.