districts

img

நூறு நாள் வேலைத்திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசு

திருப்பூர், செப்.4– கிராமப்புற ஏழை மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் முழுமையாக நூறு நாட்கள் வேலை  வழங்க வேண்டும்; மாதக்கணக்கில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள பாக் கியை வழங்க வேண்டும்; கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார திட்ட மான, தேசிய ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசைக் கண் டித்தும் தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் 8  இடங்களில் மனு கொடுத்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற் கும்  மேற்பட்டோர் பங்கேற்றதுடன், 1500 மனுக்கள் கொடுக்கப்பட்டன. உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.ரங்கராஜ் தலைமையில், ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு ஒன்றியத் தலைவர் வி.பி. முருகேசன் தலைமையில், மாவட்டத் தலைவர் ஏ.சண்முகம், நிர்வாகிகள் ஆர்.பழனிச்சாமி, பி.பழனிச்சாமி, பி. கனகராஜ், பி.தேவி உள்ளிட்டோர் பங் கேற்றனர். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு ஒன்றியச் செய லாளர் இ.மாசாணம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆ.பஞ்சலிங்கம், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர். ஊத்துக்குளி ஒன்றி யத்தில் இச்சிபாளையம், ரெட்டிபாளை யம், நடுப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு இந்த இயக்கம் நடைபெற்றது. கிளை நிர்வாகி கள் எஸ்.நந்தகுமார், கே.எஸ்.கருப்பு சாமி, தாலுகா செயலாளர் கே.பிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.மணியன், விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்,  தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் கு.பாலமுரளி உள்ளிட்டோர் பேசி னர்.  மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் மாணிக் கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் மற்றும் சத்தியமூர்த்தி, பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் ஆர்.சந்திரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின்  வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், கமிட்டி உறுப்பினர்கள் பங் கேற்றனர்.

கோவை

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் தலை மையிலும்,  தெற்கு ஊராட்சியில் தாலு காக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் தலைமையிலும், ஆனைமலை ஊராட் சியில் தாலூகா தலைவர் ப.பழனிச்சாமி தலைமையிலும், கிணத்துக்கடவு ஒன் றிய அலுவலகம் முன்பு தாலுகா தலை வர் ஆனந்த்ராஜ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரை சாமி, பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி, தாலூகா பொருளாளர்  ஏ.முத்துச்சாமி உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர்.

நீலகிரி

கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்க மாவட்டச் செயலாளர் பன் னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.வாசு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இராசி இரவிக்குமார், மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தங்க ராஜ் நன்றி கூறினார்.  தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.ரவி தலை மையில் பெருந்திரள் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எம்.முத்து, பொருளாளர் என்.பி. முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன், ஜி.பாண்டியம்மாள், கே.கோவிந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் சி.ராஜா, பி.கிருஷ்ண வேணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மலைவாழ் மக்கள் சங்க  மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை, ஆனங்கூர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. துரைசாமி, உதவித்தலைவர் கோவிந்த சாமி, உதவிச்செயலாளர் எம்.நடே சன், நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, சண் முகம், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.