districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம், ஜன.19- சேலம், கோரிமேடு பகுதியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்  ஒரு பகுதியாக சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள சேலம்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 41 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவை யான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் ஆர்வ மாக பங்கேற்று தேவையான வேலை வாய்ப்பு நிறுவனங் களை தேர்ந்தெடுத்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகனம் திருட்டு

நாமக்கல், ஜன.19- பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற வாலிபர்களை காவல் துறையினர் தேடி வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள  கோட்டக்காடு லட்சுமி நகர் பகுதியில், காலை நேர உடற் பயிற்சிக்காக வந்த லோகு என்பவர், தனது இருசக்கர வாக னத்தை, மைதானத்தின் பின்புறமாக நிறுத்தியுள்ளார். ஆனால், வண்டியில் இருந்து சாவியை எடுக்காமல் மறந்து அப்படியே விட்டுவிட்டு உள்ளே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து  வந்து பார்த்த பொழுது தனது வண்டி காணாததைக் கண்டு  அதிர்ச்சியடைந்து, எதிரே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டி ருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அதில், சுற்றும் முற்றும் பார்த்தபடி வரும் ஒரு இளைஞர், தனது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை கண்டறிந்துள்ளார். மேலும், தனது வாகனத்தை திருடிச்சென்ற இளைஞருடன் மேலும் இரண்டு பேர் என மொத்தம் மூன்று இளைஞர்கள் தனது வாகனத்தில் செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து லோகு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித் தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,  இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

திமுக இளைஞரணி மாநாடு: சேலத்தில் போக்குவரத்து மாற்றம்

சேலம், ஜன.19- சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஞாயிறன்று (நாளை) நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் இருந்து ஆத்தூர் வரை போக்குவரத்து மாற்றம் செய்து கூட்ட நெரிசலில் இருந்து பொது மக்கள் சிரமமின்றி செல்ல விழாக்குழு வினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திமுக இளைஞரணி மாநாடு ஞாயி றன்று (நாளை) சேலத்தில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து சனி (இன்று), ஞாயிறு (நாளை) ஆகிய தேதிகளில் சேலத்திலிருந்து ஆத்தூர் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க் கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌ கரியத்தை தவிர்க்கவும், கனரக வாக னங்கள் மாற்றுப்பாதைகளை பயன்ப டுத்தலாம் என விழாக்குழுவினர் தெரி வித்துள்ளனர். அதன்படி, உளுந்தூர் பேட்டை வழியாக சேலம், கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் உளுந் தூர்பேட்டையிலிருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல், வழியாக  சேலத்திற்கும் மற்றும் உளுந்தூர் பேட்டையிலிருந்து பெரம்பலூர், துறை யூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக கோவை/கேரளா செல்லலாம். கோவை மார்க்கமிருந்து சேலம் வழி யாக சென்னை அல்லது கர்நாடகா செல்லும் வாகனங்கள் ஈரோடு மாவட் டம், லட்சுமி நகர், பவானி, அம்மா பேட்டை, மேட்டூர், மேச்சேரி, தொப்பூர், தருமபுரி வழியாக செல்லலாம். தரும புரி மார்க்கமிருந்து சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாக னங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, ஓம லூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூர் வழியாகவும் மற்றும் தருமபுரி மார்க்கமிருந்து ஈரோடு/கோவை/கேரளா செல்லும் வாகனங்கள் தொப் பூர் பிரிவு, மேச்சேரி, மேட்டூர், அம்மா பேட்டை, பவானி, பெருத்துறை வழி யாக செல்லலாம். தென்மாவட்டங்களிலிருந்து சேலம்/தருமபுரி/கிருஷ்ணகிரி/கர்நா டகா செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்க ணாபுரம், தாரமங்கலம், ஓமலூர், மேச் சேரி, தொப்பூர் வழியாக செல்லலாம். வானியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங் கரை, அரூர் வழியாக சேலம் வரும் வாக னங்கள் வாணியம்பாடியிலிருந்து நாட் றம்பள்ளி, பருகூர், கிருஷ்ணகிரி, தரும புரி வழியாக செல்லலாம் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி மாற்று இடங்களில் கடைகள் அமைப்பு

நாமக்கல், ஜன.19- குமாரபாளையத்தில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளதால், பேருந்து நிலையத்திலிருந்த கடை கள் மாற்று இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலைய கட்டடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்ட டம் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்திலிருந்த கடைகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி  வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட் சில நாட்கள் முன்பு, புதிய கட்டடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சல்: சட்டக்கல்லூரி மாணவர் பலி

திருப்பூர், ஜன. 19 – திருப்பூர்: பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஓ.டி.சரண் மருத்துவ சிகிச்சை  பலனளிக்காமல் வியாழனன்று பரிதாபமாக உயிரிழந்தார். பல்லடம் அடுத்த ராயர்பாளையம் அபிராமி நகர் பகு தியை சேர்ந்த திருக்குமரன் என்பவரது மகன் சரண். இவர்  தர்மபுரி அரசு சட்டக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந் தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிக் கப்பட்ட நிலையில் சரண் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.  டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக் காமல் மாணவர் சரண் வியாழக்கிழமை இரவு உயிரி ழந்தார்.

அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

உடுமலை, ஜன.19- திருமூர்த்தி மலையின் அடிவாரப்பகுதியில் இந்து சமய  அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் அமணலிங்கேஸ்வரர்  கோவிலுக்கு புதிய அறக்காவலர் நியமனம் செய்யப்பட்டுள் ளார். மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் உள்ள  கோவில் மற்றும் பஞ்சலிங்கம் அருவிக்கு ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அன்றாடம் வந்து  செல்கின்றனர். இந்த கோவிலுக்கு  இந்து சமய அறநிலை யத்துறை ஐந்து அறங்காவலர்களை நியமனம் செய்து அறி விப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மடத்துக்குளம்  க.இராஜ பாலன்,  சின்ன வாளவாடி இல.இராதாகிருஷ்ணன்,  தேவனூர்புதூர்  பு.பாணுரேகா,  மொடக்குபட்டி ர.இரவி,  பொன்னாலம்மன்சோலை பொ.தேவராஜ் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.  நியமனம் செய்யப்பட்ட ஐந்து பேர்க ளில் ஒருவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய் யப்படுவார். பதவியேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள்  பொறுப்பில் இருப்பார்கள் என அரசு கூடுதல் தலைமைச்  செயலாளர் க.மணிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருட்டு வழக்கு: 3 பேருக்கு 3 ஆண்டு சிறை

அவிநாசி, ஜன.19- அவிநாசி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட சேவூர் காவல் நிலைய சரகத்தில் பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய புக்கான் மூர்த்திக்கு(40) 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம்  அபராதமும், ராஜேந்திரன்(35) மற்றும் சண்டி கருப்புசாமிக்கு (40) ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3  ஆயிரம் அபராதமும் விதித்து அவிநாசி குற்றவியல் நடுவர் நீதி  மன்ற நீதிபதி ஷபீனா தீர்ப்பு வழங்கினார். அரசு வழக்குரைஞர்  ஹேமா மகேஷ்வரி ஆஜராகினார்.

20ஆவது புத்தகத் திருவிழா வினாடிவினா 14 பள்ளிகளில் இன்று நடைபெறுகிறது

திருப்பூர், ஜன. 19– தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து  நடத்தும் 20ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு வினாடி வினா போட்டி கள் திருப்பூர் மாவட்டத்தில் 14 பள்ளிகளில் நடைபெறுகிறது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை இளையோர்  (ஜூனியர்) பிரிவு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை  மூத்தோர் (சீனியர்) பிரிவு என போட்டிகள் நடைபெறுகிறது.  திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடு நிலைப் பள்ளி, அரண்மனைப்புதூர் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளி, அவிநாசி சென்னி மலைக்கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, ஊத்துக்குளி ஆர்எஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயம் பழையகோட்டை ரோடு ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சித்தராவுத்தன் பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல் நிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 14 ஒன்றியங் களுக்கு உள்பட்ட பள்ளிகளில் முதல் சுற்று வினாடிவினா போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் அணி கள் என்ற முறையில் 28 அணிகள் தேர்வு செய் யப்பட்டு இரண்டாவது சுற்றுப் போட்டியில் பங்கேற்க முடியும். இரண்டு மற்றும் மூன்றா வது சுற்றுப் போட்டிகள் ஜனவரி 27 அன்று  நடைபெறும். இதே மையங்களில் 6ஆம் வகுப்பு முதல்  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்  போட்டிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான அச்சு வரைதல் போட்டி புத்தகத் திருவிழா வளாகத்தில் 28ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று புத்தகத் திருவிழா வினாடி வினா போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

31 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.61 லட்சத்தில் காதொலி கருவிகள்

திருப்பூர், ஜன. 19 – திருப்பூரில் 31 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.61  லட்சம் மதிப்பில் காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சியர்  வெள்ளியன்று வழங்கினார். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,355 மாற்றுத்திறன் மாணவர்கள்  பயின்று வருகின்றனர். இதில் 214 மாணவர்கள் செவித்திறன்  குறைபாடு உடையவர்கள். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு  பள்ளி திட்டத்தின் கீழ் இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் வீ  கார்டு நிறுவனம் இணைந்து 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 123  பள்ளிகளில் உள்ள மாணவர்களை பரிசோதித்து காதொலிக் கருவி தேவைப்படும் 60 மாணவர்களை கண்டறிந்து முதல்  தவணையாக செவித்திறன் பாதிக்கப்பட்ட 33 மாணவர்க ளுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 61 ஆயிரம்  மதிப்பிலான காதொலிக்கருவிகளை ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.கீதா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் இலி.அண்ணாது ரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் வீ கார்டு நிறுவன நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

உதகை, ஜன.19- குன்னுாரில் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பில்லி கொம்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 15 வயது மாணவி படித்து வரு கிறார். நேபாள நாட்டைச் சேர்ந்த இம்மாணவியும், அதே பகுதி யைச் சேர்ந்த மதன்குமார்( 21) என்ற வாலிபரும் இருவ ரும் காதலித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன், வருகிற 21ஆம் தேதி திரும ணம் நடைபெற இருந்தது. அதே பகுதியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், குழந்தை திருமணம் என்பதை அறிந்த ஒரு சமூக ஆர்வலர், சமூக நல பாது காப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவ லின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த சமூக நல  அலுவலர் பிரவீனா தேவி மற்றும் அலுவலர்கள், அப்பகு தியில் விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடைபெறுவது உறுதியானது. இதனையடுத்து, இரு வீட்டாரையும் அழைத்து பேசி ஆலோசனைகளை வழங்கினர். மேலும், குன்னூர் நீதிமன் றத்தில் திருமணத்திற்கான தடைச் சான்றும் பெறப்பட்டது. மீறி திருமணம் செய்து வைத்தால், ஒரு லட்சம் அபராத மும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என  பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை

நீலகிரி, ஜன.19- கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை மற்றும் மணிமண்டபம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, வியாழனன்று நடைபெற்றது.  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி யோர் பங்குதாரராக உள்ளனர். இந்த நிலையில், மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை மற்றும் மணிமண்டபம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கோட நாடு எஸ்டேட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சசிகலா பங் கேற்று அடிக்கல் நாட்டினார்.

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

ஈரோடு, ஜன. 19- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது  விநியோகத்திட்ட குறைதீர் முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு வட்டத்தில் வேப்பம்பாளையம், பெருந்துறை  வட்டத்தில் பணிக்கம்பாளையம், மொடக்குறிச்சியில் விளக்கேத்தி, கொடுமுடி வட்டத்தில் கணபதிபாளையம், நம்பியூரில் வேமாண்டம்பாளையம், பவானியில் சூரியம்பா ளையம், அந்தியூரில் பட்லூர், சத்தியமங்கலத்தில் மாக்கி னாங்கோம்பை, தாளவாடி வட்டத்தில் கும்டாபுரம் ஆகிய நியாயவிலைக்கடைகளில் முகாம் நடைபெறும். இதில் புதிய  குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல்,  நீக்கம், கை பேசி எண் மாற்றம் குறித்த கோரிக்கை மனுக் களை அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடு முட்டியதில்  கிணற்றில் விழுந்து பெண் பலி

கோவை, ஜன.19- அன்னூர் அருகே மாடு முட்டியதில், பெண் ஒருவர் கிணற் றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மாவட்டம், போத்தியம்பாளையத்தைச் சேர்ந்த  ஓதிசாமி என்பவரின் மகள் ஹர்சினிபிரியா. இவர் பி.ஏ படித்து விட்டு வீட்டில் பெற்றோர்களுக்கு உறுதுணையாக விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், கால்நடை  வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், இவர்களது வீட்டிலுள்ள விவசாய கிணற்றின் அருகே, பசு மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டி ருந்த சூழலில், அதை மீண்டும் தொழுவத்திற்கு பிடித்து  செல்ல ஹர்சினி முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாடு அவரை முட்டியதாக தெரிகிறது. இதில், வர்ஷினி  அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். ஹர்சினியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அவரது பெற் றோர், காப்ப முயன்றுள்ளனர். இதனையடுத்து, தகவ லறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஹர்ஷினியை, இறந்த நிலையில் மீட்டனர். மேலும், அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மின்தடை

ஈரோடு, ஜன. 19- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெறவுள்ளதால், இன்று  (சனிக்கிழமை) பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த வடக்கு  பெருந்துறை, சின்னவேட்டுபாளையம், பெரியவேட் டுபாளையம், ராஜவீதி, மேக்கூர், கோட்டைமேடு, பெருந் துறை மேற்கு பகுதி, கோவை மெயின்ரோடு சின்னம டத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, பள்ளக் காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா  நகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பணி வாய்ப்பு

ஈரோடு, ஜன. 19- முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், விடுதி காப்பாளர் ஆகிய பணியி டங்கள் நிரப்பப்பட உள்ளன. பள்ளி மேலாண் மைக்குழு மூலம் முற்றிலும் மதிப்பூதிய  முறையில் நிபந்தனை அடிப்படையில் இப் பணியிடங்கள் நிரப்பப்படும். இப்பணியி டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதியம் முறையே ரூ.18 ஆயிரம், ரு.15 ஆயிரம் மற்றும்  ரூ.12ஆயிரமாகும். முதுகலை ஆசிரியருக்கு எம்ஏ தமிழ், பிஎட், எம்.காம் வணிகவியல், பிஎட், கம்ப் யூட்டர் அறிவியலுடன் எம்எஸ்சி, எம்சிஏ, பிஎட் உடன் சிறப்பு கல்வி தகுதிகளாகும். பட்டதாரி ஆசிரியருக்கு பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி கணிதம், அறிவியல், பிஏ அல்லது எம்ஏ தமிழுடன் பிஎட் மற்றும் சிறப்புக் கல்வி  பெற்றிருக்க வேண்டும்.  துணை விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு D.T.Ed அல்லது D.Ed சிறப்பு கல்வியுடன் தகுதியாகும். விருப்பமுடையோர் உரிய சான்றுகளுடன் வரும் 22ஆம் தேதி மாலைக்குள் தலைமை ஆசிரியர், செவித் திறன் குறையுடையோருக்கான அரசு மேல் நிலைப்பள்ளி, ஆர்.என்.புதூர், ஈரோடு.5 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூல மாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித் துள்ளார்.

சில்வர் ஓக் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்திடுக

விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி, ஜன.19- கொத்திமுக்கு பகுதியில் மலர் விவசா யம் செய்ய சில்வர் ஓக் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் அருணா தலைமையில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட விவசா யிகள், கோத்தகிரி வட்டம் கடினமாலா கிராமம் கொத்திமுக்கு பகுதியில் மலர் விவ சாயம் செய்ய வேலை செய்து வருகி றோம். மலர் விவசாயம் செய்ய நிலத்தை பயன்படுத்த அதில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட கடந்த செப்டம்பர் மாதம்  விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மலர் விவசா யம் செய்ய காட்டு செடிகளை விரைந்து அகற்ற குப்பட்டா எந்திரம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  மேலும், சிறு, குறு விவசாயிகளாகிய நாங்கள் தோட்டப்பணிகளுக்கு வெல்டிங் மற்றும் கட்டிங் செய்ய தினமும் ரூ. 350  மற்றும் மாதம் மின் கட்டணம் கட்ட வேண்டி யுள்ளது. எனவே, சிறு, குறு விவசாயிக ளுக்கு இந்த கட்டணத்தை ரத்து செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை மனுக்களாக வழங்கினர். இதுபோல் இயற்கை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி  உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பு கோரிக்கை ஏற்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்

ஈரோடு, ஜன. 19- சிவகிரியில் ஒருங்கிணைந்த முகாம்  நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிக் கப்பட்ட நிலையில், கோரிக்கைகளை ஏற்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஏ.சகாதேவன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மொடக்குறிச்சி வட்டங்களில் மாற் றுத்திறனாளிகள் மருத்துவச் சான்று, அடையாள அட்டை, பேருந்து அட்டை,  ரயில் பயணச்சலுகை உள்ளிட்ட உதவி  பெறுவதற்காக ஈரோடு வர வேண்டிய  நிலை இருந்து வருகிறது. இந்நிலை யில் மாற்றுத்திறனாளிகளின் சிரமத் தைக் கவனத்தில் கொண்டு, சிவகி ரியை மையப்படுத்தி ஒருங்கிணைந்த முகாம் நடத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனை அரசு நிர்வாகம் ஏற்காத நிலையில் வரும் 26 ஆம் தேதியன்று ஆறு மையங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிவ கிரியில் வரும் 23ஆம் தேதி ஒருங்கி ணைந்த முகாம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள் ளார். எனவே, இம்முகாமினை மாற் றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அறிவிக் கப்பட்ட போராட்டம் கைவிடப்ப டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

80 அடி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

ஈரோடு, ஜன.19- ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி உயர கண்காணிப்பு  கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழைய குற்றவாளியை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர். ஈரோடு ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவ லகம் அருகில் 80 அடி உயர கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணியள வில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவவதாக மிரட்டியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஈரோடு தீயணைப்புத் துறை யினருக்கும், ஈரோடு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி, சுமாா் 30  நிமிடம் போராடி அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி னர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ரயில்வே  நிலைய பகுதியைச் சேர்ந்த செல்வன் (42) என்பதும், ஈரோடு தெற்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு  போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பழங்குற் றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மன அழுத் தத்தால் மதுபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக தெரி வித்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார், செல்வனை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

நூதன முறையில் தலைக்கவசம் திருட்டு

நாமக்கல், ஜன.19- ராசிபுரம் இருசக்கர வாகன நிறுத்தத்தில் ரூ..20க்கு பார்க்கிங் கட்ட ணம் செலுத்திவிட்டு ரூ.2  ஆயிரம் மதிப்புள்ள தலைக் கவசத்தை திருடிய சென்ற சிசிடிவி காட்சிகள் இணை யத்தில் வைரலாகி வருகி றது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆண்டக லூர் கேட் பகுதியில் விஸ்வா  இருசக்கர தனியார் வாகன  நிறுத்துமிடம் செயல்பட்டு வரு கிறது. இங்கு வந்த அடையா ளம் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாக னத்தை நிறுத்திவிட்டு சென் றுள்ளார். அதே நாள் நள்ளி ரவில் ஒரு நாள் வாடகையாக ரூபாய் 20 கொடுத்து அந்த நபர் தனது வாகனத்திற்கு அருகில் உள்ள மற்றொரு வாகனத்தில் மேல்  வைத்தி ருக்கும் தலைக்கவசத்தை எடுத்து கொண்டு தன்னுடை யது போல சாமர்த்தியமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைக் கவசம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சிகுள்ளாகி அந்த வாகனத்தின் உரிமை யாளர் (பெண்) தனியார்  வாகன நிறுத்த உரிமையாள ரிடம் கேட்டு வாக்கு வாதத் தில் ஈடுபட்டார். இதனைய டுதது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது, நபர் ஒருவர் தலைக்கவ சத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வேறு வழியின்றி வாகன நிறுத்த உரிமையாளர் தன் சொந்த செலவில் புதிய  தலைக்கவசத்தை வாங்கித்  தருவதாக உறுதி அளித் தார்.

காளையின் கயிற்றில் சிக்கிய இளைஞர்

தருமபுரி, ஜன.19- பாலக்கோடு அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  நடந்த எருது விடும் விழாவில் இளைஞரை காளை இழுத்துச்  சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கிறது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தண்டுகாரண ஹள்ளியில் பொங்கல் திருவிழாவை  முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எருது விடும்  திருவிழா வெகு விமரிசையாக நடந்து  வருகிறது. இத்திருவிழாவில்  அப்பகுதி பொதுமக்கள் ஒன்றி ணைந்து, 100 க்கும் மேற்பட்ட காளைகளை எருது விடும் விழா வில் ஈடுபடுத்திக் கொண்டாடினர். முன்னதாக கிராம மக்கள்  மேள, தாளங்களுடன் குல வழக்கப்படி, காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட  காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வென்றாக விடப்பட்டன.  சீறிப்  பாய்ந்து துள்ளி குதித்து வந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு காளையை விரட்டி சென்ற னர். அப்போது காளையை துரத்திச் சென்ற தண்டுகாரண ஹள்ளியைச் சேர்ந்த, ரோஹன், 20 என்ற இளைஞரின் காலில் மாட்டின் கயிறு மாட்டி கொண்டது. அதி வேகமாக சீறிப் பாய்ந்த ஓடிய காளை நிற்காததால் கயிற்றில் சிக்கிக்கொண்ட இளைஞர்  இழுத்துச் செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து  அங்கிருந்த பொதுமக்கள் காளையை பிடித்த்து கயிற்றில் சிக்கிக் கொண்ட இளைஞரை விடுவித்தினர். சிறு காயங்களு டன் இளைஞர் தப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.