மேட்டுப்பாளையம், மார்ச் 18- மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் குறித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வெள்ளியன்று, மேட்டுப்பாளையத்தில் வாகனப் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் பாதுகாப்பு உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று, பண மாக்கும் ஒன்றிய அரசின் பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இப்போ ராட்டம் குறித்து அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வினர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட், பழைய காந்தி மார்க்கெட், அன்னூர் சாலையில் உள்ள புதிய காய்கறி மார்க் கெட் பகுதியில் வாகனப் பிரச்சாரத் தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு சிஐடியு மேட்டுப் பாளையம் தாலுகா பொதுச்செயலா ளர் பாஷா தலைமை வகித்தார். இதில், அனைத்து தொழிற்சங்கங் களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.