districts

img

அறியாமையா... அக்கறையின்மையா... விளம்பர எண்ணமா? வானதி சீனிவாசனுக்கு, பி.ஆர்.நடராஜன் கேள்வி

கோவை, மார்ச் 10-  கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்துடன் இணைக் கப்பட்டிருக்கிற சூழலில், அது குறித்து எதுவும் அறியாது ஒன்றிய  அமைச்சரிடம் கோவை ரயில் நிலையத்தை சேலம் கோட்டத் துடன் இணைக்க வேண்டும் எனக் கோரி வானதி சீனிவாசன் மனு  அளித்திருப்பது வேதனைக்குரி யது என பி.ஆர்.நடராஜன் எம்.பி.,  சாடியுள்ளார். இதுதொடர்பாக, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா வது, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு  தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான வானதி சீனிவாசன், ஒன்றிய  ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து இருப்பதாக பத்திரிகை செய்தி   ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் கோவையை தலைமையி டமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உட்பட கோரிக் கைகளை  வலியுறுத்தி இருப்பதா கவும் மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால், தெற்கு ரயில்வேக்கு  உட்பட்ட பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக  பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டே இணைக் கப்பட்டு விட்டது.

அதாவது சுமார்  16 ஆண்டுகளுக்கு முன்பே இணைக்கப்பட்டு விட்டது. முன்பு இதற்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி யது. இதன் விளைவாகவே, அப் போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ்,  சேலம் கோட்டத்தை உருவாக்கி னார். இருப்பினும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற ரயில் நிலையங்கள் மட்டுமே இன்னமும் பாலக்காடு ரயில்வே கோட்டத்து டன் இணைந்திருக்கின்றது. இவற் றையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என கடந்த  2007 முதல் அனைத்து கட்சிக ளும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து போராடி வரு கிறோம். உண்மை நிலவரம் இப்படி  இருக்க, பாலக்காடு ரயில்வே  கோட்டத்திலிருந்து கோவையை பிரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்திருப்பது என்பது அவரது  அறியாமையை காட்டுகின்றது.

மேலும், சேலம் ரயில்வே கோட் டம் அமைந்த பின்னும் 45 சதவி கித வருவாயினை கொடுக்கும் கோயமுத்தூர் ரயில் நிலையத் திற்கு உரிய கட்டமைப்பு வசதி கள் செய்து தரப்பட வில்லை என்ப தால் கோவையை தனி ரயில்வே  கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத் துள்ளது. ஆனால் பிரச்சனை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும்,  இதுகுறித்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் அரைகுறை தகவல்களோடு, மத் திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அறித்திருப்பது மக் களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையாது. கோவை மாவட்டத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காது. பாஜக-வில் தேசிய பொறுப்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் போன்ற பொறுப்புகளுடன் இருப்பவர் மக் கள் பிரச்சனைகளை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்லும் போது கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரி வித்துள்ளார்.