districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக மோசடி ஆட்சியரிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் புகார்

ஈரோடு, ஜூன் 28- மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதா வது, பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளியம்பாளையம் கிராமத்தில் 12 பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி  வருகிறோம். கடந்த 22 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இக்குழுவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் மானியத் துடன் கடன் வாங்கி தருவதாக அங்கு பணிபு ரிந்து வந்த அங்கு பீட்டர், சாந்தி, மோகன சுந்தரம் ஆகியோர் எங்களிடம் ஆவணங் கள் மற்றும் காசோலைகளை பெற்றுள்ள னர். அதன் பின்னர் அவர்கள் கூறியபடி எங்க ளுக்கு கடன் வழங்கப்படவில்லை. பின்னர், எங்கள் வீட்டிற்கு வந்த 3 ஆண்கள் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என்று கேட்டனர். வக்கீல் நோட்டீஸ் வரும் என்றனர். இது குறித்து சம்மபந்தபட்டவர்களை அணுகி  கேட்ட போது, நான் தான் உங்கள் கணக்கிலி ருந்து எடுத்து விட்டேன் என்றும், விரைவாக கடனை கொடுத்து விடுகிறேன் என்று கூறிய  பீட்டர் கூறியுள்ளார். மேலும், மக்கள் நல  சங்கத்தின் குமரேசன் என்பவர் முன்னிலை யில் எழுதிக் கொடுத்தார். ஆனால், எழுதிக் கொடுத்தபடி கடனை திருப்பிக் கொடுக்க வில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கைக்கு எடுக்க வேண் டும் என மனுவில் கூறியுள்ளனர். இதேபோன்று அனுமதியின்றி செயல் படும் தேங்காய் நார் நிறுவனம் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கொடுமுடி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் கொடுத்தனர்.  இதில், கொடுமுடி வட்டம், இச்சிபாளை யம் கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல்  இயங்கி வரும்  ஸ்ரீகொங்கு காயர்ஸ், கிளிஸ் டார் எனப்படும் தேங்காய் நார் தயாரிப்பு நிறுவனத்தால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாவட்ட  ஆட்சியர் அனுமதியில்லாமல் நிறுவ னத்தை இயக்க மாட்டோம் என உறுதிய ளித்த நிலையில், நிறுவனத்தை இயக்க  அனைத்து அனுமதியும் பெறப்பட்டுவிட் டது என்றும், ஊராட்சி மன்ற அனுமதி தேவை யில்லை என்றும் பொதுமக்களிடையே பொய்யான தகவல் பரவி வருகிறது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க  வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்த னர்.

96 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அறிவியல் பூங்கா பயிலரங்கம் திறப்பு

திருப்பூர், ஜூன் 28– திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான அறிவியல் பூங் காவில் மாணவர் பயிலரங்கம் நவீன ப்ரீகாஸ்ட் கட்டுமானத்  தொழில் நுட்ப முறையில் 96 மணி நேரத்தில் கட்டி முடிக்கப் பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையத்தில் மாநக ராட்சி நிர்வாகம், வெற்றி அமைப்பு இணைந்து நமக்கு நாமே  திட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் 2400 சதுர அடி பரப்பளவில்  இந்த பயிலரங்க கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை  மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் திறந்து வைத்தார். தமிழகத்தில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள அரசின் இந்த பூங்காவில் 12 ஏக்கரில் 50 வகை மூங்கில் பூங்கா, சிறுவர் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் மாணவர்  பயிலரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், இடுவாய் ஊராட்சித் தலைவர்  கே.கணேசன் மற்றும் வெற்றி அமைப்பினர் கலந்து கொண்ட னர்.

விவசாய மின்மோட்டாருக்கு மானியம் பெற அழைப்பு

திருப்பூர், ஜூன் 28 – 3 ஏக்கர் வரை விளைநிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகள் மின் மோட்டாருக்கு மானியம் பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளார். விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு வரைபடம், மின்  இணைப்பு அட்டை, வங்கி புத்தக நகலுடன் விண்ணப்பிக்க  வேண்டும். திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (944324 3495), உபகோட்ட அலுவலக உதவி செ.பொறியாளர் (948644 3437), தாராபுரம் உபகோட்ட உதவி செ.பொறியாளர் (790408 7490) உடுமலை உபகோட்ட உதவி செ.பொறியாளர் (9865497 731) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட் டுள்ளது.

மூலனூரில் ரூ.2.57 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஜூன் 28 -  திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் ரூ.2.57 கோடிக்கு பருத்தி ஏலம் போனதாக  அதன் முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் தெரிவித் துள்ளார். இங்கு நடைபெற்ற ஏலத்தில் திருப்பூர், கரூர், திருச்சி,  திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 1061  விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தி ருந்தனர். அதேபோல் சேலம் மற்றும் மேற்கண்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த 21 வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்ற னர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.11 ஆயி ரத்து 898ம், குறைந்தபட்ச விலையாக ரூ.8ஆயிரத்து 550க் கும் சராசரி விலையாக ரு.9ஆயிரத்து 680க்கும் விலை  போனது. மொத்தம் 8251 முட்டைகள் 2 ஆயிரத்து 686 குவிண் டால் பருத்தி ரூ.2 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 634க்கு  விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப் பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

திருப்பூரில் மேலும் 11 பேருக்கு கொரோனா 

திருப்பூர், ஜூன் 28- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேர் சிகிச்சை  முடிந்து வீடு திரும்பினர். இதையடுத்து மாவட்டத்தில் தொற் றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55  ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 25 ஆகவும், இதில்  1 லட்சத்து 28 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை முடிந்து நலமடைந்த னர். இதுவரை 1052 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள் ளனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

திருப்பூர், ஜூன் 28 - திருப்பூரை அடுத்த வள்ளிபுரத்தில் 13 வயது சிறுமியை  பாலியல் துன்புறுத்தல் செய்த 23 வயது இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், போக்சோ சட்டப் பிரிவுகளின்்படி 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாயன்று தீர்ப்பளித்தார்.

பொங்குபாளையத்தில் புதிய விஏஓ அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

திருப்பூர், ஜூன் 28 – திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில் 25 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் இட நெருக்கடியாக இருப்பதால், புதிய கிராம நிர்வாக அலுவல கம் கட்டித் தரும்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

வீரபாண்டி அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 28 – திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய  வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல்  இடம் ஒதுக்கித் தரும்படி 54ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச லம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  விடுத்தார். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு  அளித்த சி.அருணாசலம் வீரபாண்டி பள்ளி இட நெருக்கடி பிரச்சனை குறித்து கூறியதாவது: கடந்த 1927ஆம் ஆண்டு வீரபாண்டி தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1984இல் நடு நிலைப் பள்ளியாகவும், 2002இல் உயர் நிலைப் பள்ளியாகவும், 2010இல் மேல் நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப் பட்டது. நடப்பு 2022 – 2023 கல்வி ஆண்டில்  1932 மாணவர்கள் படித்து வருகின்ற னர். இவர்களுக்கு மொத்தம் 40 வகுப்ப றைகள், ஆய்வகங்கள் மற்றும் போதிய கழிப்பறை வசதிகள் தேவைப் படுகிறது. ஆனால் மொத்தம் 20 வகுப்ப றைகள் மட்டுமே உள்ளன. எனவே அவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் சிரமமான நிலை உள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு 4 கழிப்ப றைகள் மட்டுமே இருக்கின்றன. பள்ளி யில் வேலை செய்யும் 35 ஆசிரியர்க ளுக்கும் போதிய அடிப்படை வசதிகள்  இல்லை.  தற்போதுள்ள மாணவர் எண்ணிக் கைக்கு கூடுதலாக 22 வகுப்பறைகள் தேவை. வருவாய்த் துறை மூலம் பெற்ற தகவலின்படி, இப்பள்ளியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலை வில், அல்லாலபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சுமார்  10 ஏக்கர் நிலம் (எஸ்.எப்.எண்: 432, 433)  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. அதன் அருகிலேயே  எஸ்எப் எண் 458-இல் சுமார் 5 ஏக்கர் நிலம் காளிகுமாரசாமி கோயில் அறக் கட்டளை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இந்த இரு இடங்களில் ஏதா வது ஒரு இடத்தை கல்வி கற்கும் மாண வர் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  சி.அருணாசலம் கேட்டுக் கொண்டார். விரிவடைந்து வரும் இப்பகுதியில் ஏழை உழைப்பாளர் வீட்டுப் பிள்ளை கள் கல்வி வாய்ப்பை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியு றுத்திக் கேட்டுக் கொண்டார்.

நுகர்பொருள் வாணிபக் கழக ரேசன் கடைகளை  கூட்டுறவுத் துறைக்கு மாற்ற சிஐடியு எதிர்ப்பு

திருப்பூர், ஜூன் 28 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்ற உத்தேசித்திருப்பதைக் கைவிடும்படி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழி லாளர் சங்க மண்டல மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக செஞ் சுடர் மணி, செயல் தலைவராக வி.ஏழு மலை, செயலாளராக மணிமாறன், துணைத்  தலைவர்களாக செல்வநாதன், பரமேஸ்வ ரன், சங்கர், துணைச் செயலாளர்களாக வீரய்யன், அண்ணாதுரை, சரவணக்குமார், பொருளாளராக செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் சுமைப்பணியில் அவுட் சோர்சிங் அனுமதிக்க வேண்டாம், அடி மட்ட ஊழியர் உழைப்புச் சுரண்டலை தடுத்து  நிறுத்த வேண்டும், நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் அரவை ஆலை முகவர் களை அனுமதிக்க கூடாது, வாணிபக் கழகத் தில் காலி பணியிடங்களை 12 (3) ஒப்பந்தத் தின் மூலம் நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாநாடு வரவேற்புக்குழு ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் நுகர்பொ ருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு திருப்பூர் எம்.சி.மஹா லில் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வரவேற் புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவ ராக சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், செயலாளராக சங் கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.ஏழு மலை ஆகியோர் உள்ளிட்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் டி.குமார் உள்பட நுகர்பொருள் வாணி பக் கழக தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டல் - ஒருவர் கைது

கோவை, ஜூன் 28- கோவை, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்  ராஜா - கலைவாணி தம்பதியினர், கிணத்துக்கடவைச் சேர்ந்த  பூபதி சிவராஜ் (25) என்பவரிடமிருந்து வட்டிக்கு ரூ.17 ஆயி ரத்து 500 கடன் பெற்றுள்ளனர். இத்தொகையை கலைவாணி முழுவதும் செலுத்திவிட்டார். ஆனாலும் பூபதி சிவராஜ், கலைவாணியிடம் வட்டித்தொகை தருமாறு மிரட்டல் விடுத்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச்சென்றுள்ளார். இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின்பேரில், கந்து வட்டி தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதி  சிவராஜை போலீசார் கைது செய்தனர்.

மின்தடை

ஈரோடு, ஜுன் 28- சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வரும் இன்று (புதன்) நடைபெற வுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப் காட், பெருந்துறை பவானி ரோடு, சிலேட்டர் நகர், கருமாண்டி செல்லிபாளை யம், ஓலப்பாளையம், திரு வாச்சி, கந்தாம்பாளையம், வள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின் விநியோ கம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது.




 

 

 

;