districts

img

எங்கே ரயில் நிலையம்?

திருப்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் ரயில் நிலை யம் என்ற நுழைவாயில் பகுதியை மறைத்து சிட்டி யூனியன் வங்கியின் பெயர் பலகை மிகப் பெரியதாக வைக்கப்பட்டுள்ளது. அதில் ஓரத்தில்  சிறு எழுத்தாக திருப்பூர் ரயில் நிலை யம் என்பது ஒப்புக்கு குறிப்பிடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில்  இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையத் தில் புதிதாக வந்திருக்கும் பயணிகள்  யாரேனும் பார்த்தால் ரயில் நிலை யம் எங்கே என்று தேடும் நிலை தான் ஏற்படும். இதுபோல் ஆயிரக்க ணக்கான மக்கள் வந்து செல்லக்கூ டிய ரயில் நிலையத்திற்கு தனியார் உதவி பெற்று பெயர் பலகை வைக் கும் பொழுது அவர்களது சுய விளம் பரம் பெரியதாகவும், ரயில் நிலையத் தின் பெயர் சிறியதாகவும் வைக்கப் பட்டு இருப்பது சரியல்ல. ரயில் நிலைய அதிகாரிகள் இதை கவ னித்து சரி செய்ய வேண்டும் என் பதே மக்களின் எதிர்பார்ப்பு.