பள்ளிபாளையம், டிச.22- பள்ளிபாளையம் அருகே தனியார் காகித ஆலைக்கு அதிகளவில் மரக்கட்டைகள் சென்ற லாரியால் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சி, காவேரி ஆர்.எஸ். பகுதியில் செயல் படும் தனியார் காகித ஆலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரக்கட்டைகள் மற்றும் காகித ஆலைக்கு தேவையான உதிரி பாகங்கள், பள்ளிபாளையம் கொண்டு செல்லப்படுகிறுது. இந்நிலையில், புதனன்று ஒரு லாரி மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு ஆயக்காட்டூர் என்ற பகுதி அருகே வந்த போது, அதிக உயரத்துடன் மரக்கட்டைகள் அடுக்கபட்ட நிலையில், மின்சார கம்பி மீது பட்டு அறுந்து, நடுசாலையில் விழுந் தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள், தொடர்ந்து இதுபோல நடைபெற்று வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் வலியுறுத்தி சம் பந்தபட்ட லாரியை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார், தனியார் காகித ஆலை நிர்வாகிகள் மற்றும் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் பொதுமக்களிடம் சமா தான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காகித ஆலை நிர்வாகத்தினர் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.