districts

img

தாராபுரம் கொங்கூர் இடைச்சி அம்மன் குளம் சீரமைக்கும் பணி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

தாராபுரம், ஜூலை 11- தாராபுரம் அருகே ரூ.68 லட்சம் மதிப்பில் குளம் சீரமைக் கும் பணியினை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். தாராபுரம் வட்டம்  கொங்கூரில் இடைச்சி அம்மன் குளம்  உள்ளது. மழை பெய்யும் காலங்களில் குளம் நிறைந்து தண்ணீர் நிற்பதால் இப்பகுதி மக்கள்  சுமார் 50 ஆண்டுகளாக  விவசாய பணிகளுக்கு குளத்தைச் சுற்றி செல்ல வேண்டிய நிலை நீடித்தது. இந்நிலையில் தமிழக அரசு இக்குளம்  புனரமைக்கும் பணிக்காக ரூபாய் 68 லட்சத்து 42 ஆயிரத்து  135 ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதையடுத்து புனரமைக்கும்  பணியினை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர்  துவக்கி வைத்தனர்.  புனரமைப்பு பணியில் மறுகரையில் முட் செடிகளை அகற்றுதல், பாலம் அமைத்தல் மதகுகள் புனர மைப்பு, வரத்து கால்வாய்கள் செடிகொடிகளை அகற்றுதல்,  கழிவுகளை அகற்றுதல், தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற  பணிகள் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியகுழு தலைவர் எஸ்.வி.  செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி  பொறியாளர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.