சேலம், நவ.14- காடையாம்பட்டி அருகே வேப்பிலை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணியை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், வேப்பிலை ஊராட்சி, தொப்பூர், ராஜகணபதி நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிக வும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்களின் சிரமத்தை போக்க குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி தொடக்க விழா திங்களன்று நடைபெற் றது. இந்த விழாவில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி கலந்து கொண்டு, சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மகேஸ்வரி வெங்கடே சன், ஊராட்சி மன்ற தலைவர் கமலா வைத்திலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.