கோவை, டிச.6- கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஒன்று தீடிரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (75). கோவை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திங்களன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூ லத்தில் ஓய்வூதியம் தொடர்பாக விசா ரிக்க வந்துள்ளார். அப்போது அவர் தனது காரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் தீடீரென அவரது காரில் இருந்து கருப்புகை வெளி யேறியது. இதன்பின் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்குள் காரின் பெரும்பகுதி முழுமையாக எரிந்து சேதமானது. காரின் பேட்ட ரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படு கிறது. ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடை பெற்று வந்ததால் அதிகளவு மக்கள் வந்திருந்த நிலையில், கார் தீபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக பந்தையசாலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.