districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 13- புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் சேலத்தில் நடைபெற்றது.  ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த  உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை  தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட் டின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்வி திட்டம் 2020-யை அரசு கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரி யர்களுக்கும் மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதியத்தை தமி ழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட தலை வர் மா.ஜான் பிரேம்குமார், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலை வர் கணேசன் ஆகியோர் தலைமை தாங் கினார். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலா ளர் நா.பெரியசாமி, உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாநி லத் துணைத் தலைவர் மு.மாயகிருஷ் ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றி னர்.  முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்,  தமிழ்நாடு உயர்நிலை  மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கழகம்,  தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழ கம் ஆகிய அமைப்புகளின் கூட்டமைப் பான இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பினர் திரளானோர் பங்கேற்றனர்.