districts

img

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் சோதனை

கோபி, அக்.12- கோபிசெட்டிபாளையம் அருகே ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வரமுருகனின் தாய், தந்தை மங்கையர்கரசி, சின்னசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். ராமேஸ்வரமுருகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார் எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை மாநகர 4 ஆம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து ராமேஸ்வரமுருகனுக்கு தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவரது பூர்விக இடமான வெள்ளாங்கோவில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.