districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி

கோவை, டிச.2- டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி  நடைபெற்ற சம்பவம் உக்கடம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியை சேர்ந்தவர் சங்கர் (32). டாஸ்மாக் கடை  ஊழியர். இவர் சம்பவத்தன்று உக்கடம்- பேரூர் சாலையில்  நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர்  திடீரென சங்கரை வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர்  சங்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு அவர்  தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வை;j திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார். இதனால்  அதிர்ச்சி அடைந்த சங்கர் சத்தம் போட்டார். அவரின்  சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.  அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் சங்கர் சட்டை  பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சங்கர் பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசார ணையில் சங்கரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த தினேஷ்குமார் (21) என்பது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைந்தனர். கோவை சிவானந்த காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார் (47). இவர் டாடாபத் 2-வது வீதியில் அச்சகம் நடத்தி  வருகிறார். சம்பவத்தன்று ஆனந்தகுமார்  அச்சகத்திற்க  சென்றார். அப்போது அங்கிருந்த ரூ.50 ஆயிரம்  மதிப்புள்ள  அலுமினியம் தகடுகள் திருட்டு போயிருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ரத்தினபுரி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர் களை தேடி வருகின்றனர்.

ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை கடத்தல்

சேலம், டிச.2- மினி லாரியில் நூதன முறையில் ரூ.6லட்சம் மதிப்பிலான  புகையிலை பொருட்களை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்தில் தீவட்டிப்பட்டி வழியாக பெங்களூரில் இருந்து புகையிலை  பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிற்கு தகவலின் அடி;g படையில் தீவட்டிப்பட்டி போலீசார் பல்வேறு இடங்களில்  வெள்ளியன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காடையாம்பட்டி தாலுகா தின்னப்பட்டியில் அதிவேகமாக வந்த ஒரு மினி லாரியை பிடித்து சோதனை யிட்டனர். இதில் மினி லாரியின் பிளாட்பாரத்தில் குடோன்  அமைத்து நூதன முறையில் ரூ.6லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் போதை பொருட்கள் கடத்தியிருப்பது கண்டு பிடித்தனர். இதைதொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம்  தொப்பூர், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா(22) என்ப வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னலாடை பருத்தி நூல் விலையில் மாற்றமில்லை

திருப்பூர், டிச. 2 - கடந்த மாதம் பின்னலாடை பருத்தி நூல் விலை கிலோவுக்கு  ரூ.20 குறைந்த நிலையில் தற் பொழுது நடப்பு மாதத்திற்கான நூல்  விலையில் எந்த மாற்றமுமின்றி கடந்த மாத விலையே தொடரும்  என நூற்பாலைகள் அறிவித் துள்ளன. திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவ னங்கள் மற்றும் அதனை சார்ந்த  ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப் பொருளாக இருந்து வருவது பருத்தி  நூல் ஆகும். தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்த வுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல்  விலை உள்பட மூலப் பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய் யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் ஏற்படு வதால், தொழில்துறையினர் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற் படுகிறது. நூல் விலை உயரும்போது  ஆடை விலையை உயர்த்தினால், அதிக விலை என்று ஆர்டர்கள் கிடைப்பதில்லை, நூல் விலை குறைந்தாலும், ஏற்கெனவே கொள் முதல் செய்த நூலில் ஆடை உற்பத்தி  செய்யும்போது, விலையைக் குறைத்து கேட்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங் களாகவே நூல் விலை  நிலையாக  இல்லாமல் உள்ளது. எனவே நூல்  விலையை குறைப்பதுடன், சீரான  விலையில் நிலையாக இருக்கும்படி  செய்ய வேண்டும் என தொழில்  துறையினர் வலியுறுத்தி வந்தனர்.  கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 நூல் விலை குறைந்த நிலையில்  நடப்பு டிசம்பர் மாதத்திற்கான நூல்  விலையை நூற்பாலைகள் மாதத் தின் முதல் நாளான டிசம்பர் 1ஆம்  தேதி வெளியிட்டன. இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை,  கடந்த மாதம் விலையே தொடரும்  எனவும் நூற்பாலைகள் தெரிவித் துள்ளன. அதன்படி ஒரு கிலோ 20- ஆவது நம்பர் கோம்புடு நூல் ரூ.273க்கும்,24ஆம் நம்பர் ரூ. 285க்கும், 30-ஆம் நம்பர் ரூ. 295க்கும், 34ஆம் நம்பர் ரூ.315க்கும், 40ஆம் நம்பர் ரூ.335க்கும், 20ஆம் நம்பர் செமி கோம்புடு நூல் கிலோ ரூ.265க்கும், 24ஆம் நம்பர் ரூ. 275க்கும், 30ஆம் நம்பர் ரூ.285க்கும்,  34ஆம் நம்பர் ரூ. 305க்கும், 40ஆம்  நம்பர் ரூ.325க்கும் விற்பனை  செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

விபத்தில் தொழிலாளி பலி

கோவை, டிச. 2-  கோவை வளிளயாம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் (47). தொழி லாளி. இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சரவ ணம்பட்டியில் இருந்து துடி யலூர் சாலையில் சென்று  கொண்டிருந்தார். அப் போது துடியலூர் அருகே  வந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப் பாட்டை இழந்து லாரி மீது  மோதியது.  இதில் பலத்த காயம் அடைந்த ரவி சங்கர் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அரசு ஊழியர் சங்க வட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, டிச.2- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  அந்தியூர் வட்டக்கிளையின் 3 வது மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாவட்ட துணைச் செயலாளர் தா. திருமுருகன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைதலைவர் ஏ.செந்தில்நாதன் நிறைவுரையாற்றினார்.  தலைவராக அய்யனார், துணைத் தலை வராக ஸ்ரீதேவி, செயலாளராக சி.முருகன், துணைச் செயலாளராக நவநீதன், பொருளா ளராக கலைவாணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

போக்குவரத்து விதிகளை மீறிய 3,147 வாகனங்கள்

கோவை சரக போக்குவரத்து இணை ஆணையர் தகவல்

கோவை, டிச.2- கோவை சரகத்தில் கடந்த 10 மாதத்தில்  போக்குவரத்து விதிகளை மீறிய 3,147  வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என கோவை சரக போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தெரிவித் துள்ளார். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலக அதி காரிகள், விதிமுறை மீறல் வாகனங்கள் மீது  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட  எல்லைப்பகுதி மற்றும் பல்வேறு பகுதியில்  அவ்வப்போது தணிக்கை நடத்தி, விதி முறை மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.  இதுகுறித்து கோவை சரக போக்கு வரத்து இணை ஆணையர் சிவக்குமரன் கூறு கையில், கோவை சரகத்தில் கடந்த ஜனவரி  முதல் அக்டோபர் மாதம் வரை போக்கு வரத்து விதிமுறைகளை மீறியதாக 3  ஆயிரத்து 147 வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிக பாரம், உரிய  ஆவணங்கள் இன்றி இயங்கியது, போக்கு வரத்து விதிகளை பின் பற்றாமல் இயங் கியது, உரிய கட்டணம் செலுத்தாமல் இயங்கியது, தலைக்கவசம், சீட் பெல்ட் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறிய    வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. கடந்த 10 மாதத்தில் ரூ.28.79 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. இது தவிர இணக்க கட்டணம், வரியினங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்பட்ட கட்டணங்கள் என கடந்த 10  மாதத்தில் அலுவலகங்களின் மூலமாக  ரூ.67.10 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை  அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றியது, கூடுதல் கட்டணம் என பல்வேறு முறைகேடு  காரணமாக சரக அளவில் 256 வாகனங்கள்  போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூல மாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு  வாகனங்களில் ஓவர் லோடு தொடர்பாக  அதிக புகார்கள் வருகிறது. வாகனங்களில்  நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே சரக்குகளை ஏற்ற வேண்டும். அதிக வேகம்,  போக்குவரத்து விதிமுறை மீறல், ஓவர்  லோடு ஏற்றி வாகனங்களை இயக்கும்போது  விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.  விபத்து ஏற்படும் அளவிற்கும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்பு

அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: அரசியல் சாசனத்தில் நீதித்துறையின் பங்கு கருத்துரை: பிரதாபன் ஜெயராமன்

அவிநாசி - அத்திக்கடவு திட்ட குழாய்க்கு தீவைப்பு

அவிநாசி, டிச.2- அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் குழாய்க்கு அடையா ளம் தெரியாத சில நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற் பட்டுள்ளது. அவிநாசியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சங்க மாங்குளம் அமைந்துள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட் டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பயன்பெறும் குளங் களில் முக்கிய குளமாக உள்ளது. வெள்ள காலங்களில் இந்த குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் வாய்க்கால் வழி யாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள குட் டைக்கு செல்கிறது. அங்கிருந்து அணைப்புதூர் சென்று நல் லாற்றில் சங்கமிக்கும் வகையில் திட்டம் உள்ளது. அத்தித் கடவு திட்டம் சுமார் ரூ 1650 கோடி மதிப்பீட்டில் நிறைவேற் றப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சங்மாங்குளம் அருகேயுள்ள குட்டையில் அத்திக்கடவு திட்டக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  குட்டை அத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறது. இந்நிலை யில் வியாழனன்று காலை இந்த குட்டையில் உள்ள அத்திக் கடவு திட்ட குழாய்க்கு சில நபர்கள் தீ வைத்து சென்றனர். இதில் சுமார் 10 அடி தூரத்துக்கு குழாய் எரிந்து சேதமாகி யுள்ளது.  இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக் கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.  இந்த குழாய்க்கு தீ வைத்த நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், டிச.2- உலக மகளிர் தின விழாவின்போது பெண்களின் முன் னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ் விருதிற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த  நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை,  அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மை யாக பணி புரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றிவரும் நபர்களுக்கு 2023-ஆம் ஆண் டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.  எனவே, மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களு டன் வரும் பத்தாம் தேதிக்குள் https://awards.tn.gov.in  இணைதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்திடுமாறு மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு ஆய்வு நடத்த வலியுறுத்தல்

திருப்பூர், டிச.2- கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடங்கி பாளையம் பகுதி யில் உள்ள தனியார் கல்குவாரியில் பாரம் ஏற்றி வந்த லாரி  கவிழ்ந்து சுக்கு நூறாக நொறுங்கியதில் ஒரிசாவை சேர்ந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மோசமான கற்குவாரி இறப்பு நிகழ்வுகளில் உண்மை கண்டறியும் குழு  அமைக்கப்பட்டு பொது ஆய்வு செய்ய களம் கண்டால் மட் டுமே அனைத்து உண்மையும் வெளிவரும் எனவும், இதற்கு தமிழக அரசு உரிய ஏற்பாடு செய்யுமாறு அரசு நிர்வாகத்திடம், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

15 ரயில்கள் ரத்து: தட்கலில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதி

திருப்பூர், டிச. 2 -  கோவை, திருப்பூர் வழியாக செல்லும் 15 ரயில் கள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்கில் பெரும் திணறல் ஏற்பட் டுள்ளது. சனிக்கிழமை இரவு செல்லக்கூடிய ரயில் களின் தட்கல் டிக்கெட்டுகள் மற்றும் ப்ரிமியம் தட்கல் டிக்கெட்டுகள் ஓரிரு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விட்டதால் பலர் கடும் அவதி அடைந்து உள்ளனர்.  கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை, பெங்களூர் செல்லும் ரயில்களின் முக்கிய வழித்த டமாக இந்த பகுதி உள்ளது. இந்த வழித்த டங்களில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இந்த வழித் தடத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி சேலத்தில் பராமரிப்பு பணிகளுக் காக தெற்கு ரயில்வே, 15 ரயில்களை ரத்து செய்துள் ளது. இதில் 3 ஆம் தேதி காலையில் கோவையில் இருந்து கிளம்பக்கூடிய கோவை - சென்னை இண் டர்சிட்டி ரயில், மறுமார்க்கத்தில் சென்னை- கோவை இண்டர்சிட்டி ரயில், கோவை எக்ஸ்பி ரஸ் ரயில், கோவை - சென்னை சென்ட்ரல் ஜன சதாப்தி ரயில், கோவை - பெங்களூர் உதய் எக்ஸ்பி ரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு உதய் எக்ஸ்பி ரஸ், எர்ணாகுளம் - பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 10 ரயில்கள் முழுமை யாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.  மங்களூரில் இருந்து கோவை, திருப்பூர் வழி யாக  சென்னை செல்லக்கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரயில் 3 ஆம் தேதி ஈரோடு வரை மட்டும் இயக் ்கப்படுகிறது.

கோவையில் இருந்து கிளம்பி சேலம், பெங்களூர் வழியாக செல்லும் குர்லா எக்ஸ்பி ரஸ் ரயில் தமிழகத்திற்குள் வராமல் பெங்க ளூரில் இருந்தே இரு மார்க்கங்களிலும் இயக்கப் படுகிறது.  சென்னை வழியாக தன்பாத் செல்லும் ரயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு வழியாக மும்பை செல்லும் ரயில் 2 மணி நேரம்  தாமதமாக இயக்கப்படுகிறது. புது டெல்லியில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக திருவ னந்தபுரம் செல்லும் கே.கே.எக்ஸ்பிரஸ் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு சனிக்கிழமை மட்டும் இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரயிலும், செகந்தி ரபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்கிற சபரி மலை சிறப்பு ரயிலும் 6 மணி நேரம் தாமதமாக இயக் கப்படுகிறது.

திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் நாகர் கோவிலில் இருந்து கோவை செல்கிற எக்ஸ்பி ரஸ் ரயிலும் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப் படுகிறது.  இவ்வாறு சனிக்கிழமை பகல் நேரத்தில் முழு மையாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப் பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிக அளவி லான திருமணம் மற்றும் விஷேசங்கள் நடைபெற இருக்கிறது. இதனால் வெள்ளியன்று தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய  ரயில் நிலையங்களிலும், இண்டர்நெட் மையங்களிலும் பயணிகள் குவிந் தனர்.  ரயில்வே புக்கிங் வலைத்தளம் திணறிய நிலை யில் வெள்ளி மற்றும் சனி இரவு இயக்கப்படும் ரயில் கள் அனைத்திலும் அதிகமான அளவு காத்தி ருப்போர் பட்டியல் புக்கிங் நடைபெற்றுள்ளது.  மேலும் சனிக்கிழமை இரவு கிளம்பக்கூடிய  ரயில்களில் டிக்கெட் விற்றுத்  தீர்ந்ததால் வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் பெரும் அவதிக்குள் ளாகினர்.

குறைதீர் கூட்டம்

திருப்பூர், டிச.2- திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரி யும் படைவீரர்கள் மற்றும்  அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க் கும் நாள் கூட்டம் டிச.7 ஆம் தேதி  நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.  படைவீரர் கொடிநாள் 2022 தேநீர் உபசரிப்பு மாலை  4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (தரைத்தளம் - அறை எண். 20-ல்) நடை பெற விருக்கும் நிகழ்ச்சியு டன் இணைத்து நடைபெற உள்ளது. எனவே திருப்பூர்  மாவட்டத்தைச் சார்ந்த முன் னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலை.,யில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை துவக்கம்

கோவை, டிச.2- கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை வெள்ளியன்று துவங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கை வெள்ளியன்று துவங்கியது. 6 முதல் 12 ஆம் வகுப்பு  வரை தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்க ளுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையிலான மாண வர் சேர்க்கைக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் வெள்ளியன்று துவங்கியது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு பட்டியலில் முதல் 5 இடங் களை பிடித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந் தர் வெ.கீதாலட்சுமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதன்பின் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதா லட்சுமி பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக மொத்தம் 7 ஆயிரத்து 755  விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதை பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி யில் பயின்றது குறித்து ஆய்வு செய்து, தகுதியான 6 ஆயிரத்து 602 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களுக் கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, 413 இளமறிவியல் படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வுப் பணிகள் துவங்கி உள் ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்காக மாணவ, மாணவி கள் பெற்றோர்களோடு வெள்ளியன்று வந்தனர். தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா  200க்கு, 196 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப்  பிடித்துள்ளார். பிஎஸ்சி, படிப்பு கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவ ருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 194 மதிப் பெண்கள் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா மதுரை கல்லூரியிலும், 193.5 கட் ஆப் மதிப்பெண் கள் பெற்ற புதுக்கோட்டை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற மாணவிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் வழி யில் படிப்பதற்கான விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ்  இயங்கி வரும் 18 நேரடி உறுப்பு கல்லூரிகளிலும், 28 தனியார் உறுப்பு கல்லூரிகளிலும் இளங்கலை படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. ஜன.8 ஆம் தேதி பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இவர் களுக்கான வகுப்புகள் துவங்கப்படும், என்றார்.

ஜெர்தலாவ் கிளை கால்வாயை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, டிச.2- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வேப்பல அள்ளி  ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், சாமனேரி உள் ளது. இந்த ஏரி 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தாண்டு  பரவலாக மழைபெய்தும் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலை சுமார் 20 ஆண்டுகளாக நீடித்தது வரு கிறது. தற்போது தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணை நீர் நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டு, ஜெர்தலாவ் கிளை கால் வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு நீர் நிரம்பி வருகிறது. ஜெர் தலாவ் கிளை வாய்க்கால் மூலம், பென்னாகரம் வட்டம், வேப் பல அள்ளி ஊராட்சி, பாரதிபுரம் கிராமத்தின் அருகே உள்ள  சாமனேரிக்கு தண்ணீர் கொண்டுவர கால்வாய் நீட்டிப்பு  செய்ய வேண்டும். நீட்டிப்பு செய்வதன் மூலம் சாமனேரியில் நீர் நிரம்பி இதன் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்‌. இதன் மூலம் 350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம் படும்.  எனவே ஜெர்தலாவ் கிளை கால்வாயை, சாமனேரிவரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின், பகுதிக்குழு செயலாளர் ஆர்.சக்திவேல் மற்றும் அப்பகுதி விவசாயிகளுடன் தருமபுரி கோட்டாட்சி யர் ஜெயக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.

தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்க வலியுறுத்தி

கோவையில் இன்று ரயில் மறியல் போராட்டம்

கோவை, டிச.2- கோவையிலிருந்து தென் மாவட் டங்களுக்கு ரயில் இயக்க வேண் டும் என வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சியினர் சனியன்று (இன்று) ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், காசில்லாமல் பயணிக்க காசிக்கு ஒன் றிய அரசு ரயில் விடுகிறது. ஆனால், காசு கொடுத்து பயணிக்க ராமேஸ் வரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை, பழனி உள்ளிட்ட நகரங்க ளுக்கு ரயில் இயக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்க ளைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து  வருகின்றனர். குறிப்பாக தென்மாவட் டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் உள்ளனர். இத்தொழிலாளர் கள் தங்களது சொந்த ஊர்களுக் குச் செல்ல பேருந்துகளையே நம்பி யிருக்க வேண்டியுள்ளது. பொள் ளாச்சி ரயில் பாதை சீரமைப்புப் பணி கள் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலும், கோவையிலி ருந்து பொள்ளாச்சி வழியாக தென்  மாவட்டங்களுக்கு ரயில் போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. கோவையிலிருந்து பொள்ளாச்சி  வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்கினால்,  பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். கோவை மற் றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வர்த் தகம் பெருகும். ரயில்வே துறைக்கும்  நல்ல வருவாய் கிடைக்கும். இந்த கோரிக்கையை முன்வைத்து, கோவை ரயில் நிலையம் முன்பு சனி யன்று (இன்று) ரயில் மறியல் போராட் டம் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழ கம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், எஸ்டிபிஐ, திராவி டர் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந் திய யூனியன் முஸ்லிம் லீக், மே 17 இயக்கம் உள்ளிட்ட 33 அமைப்பு களின் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

ஈரோடு, டிச.2- பெருந்துறை அருகே அரசு பள்ளியில் பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் வியாழனன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெருந்துறை வட்டம், பாலக்கரையில்  உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் கழிவறைகளை அங்கு பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகளே சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  இதனையடுத்து பெற்றோர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் குழந்தைகள் நல குழுவிற்கு புகார் செய்யப்பட்டது. அதேபோல குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. அதன்படி 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறையின் விசாரணையில், தலைமை ஆசிரியர் கீதாராணி மாணவா்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் கீதாராணியை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

புலி காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

ஈரோடு, டிச.2- புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் கண் காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி வெள்ளியன்று தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை யான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன், மழைக்காலத்திற்குப்பின் என 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன்படி மழைக் காலத்திற்கு பின் கணக்கெடுப்பு வெள்ளியன்று துவங்கி 6  நாட்களுக்கு நடைபெறுகிறது.  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்திய மங்கலம், பவானி சாகர், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர், விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீர ஹள்ளி வனச்சரகங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள், 5 பேர் கொண்ட குழுக்களாக இப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  இக்குழுக்கள் வனவிலங்குகளின் கால்தடம், எச்சத்தை அளவீடு செய்தும், எச்சத்தை சுற்றி ஒரு மீட்டர் சுற்றளவிற்கு புற்கள் உள்ளனவா எனவும், எச்சத்தை வெயில்படும் இடங் கள், நிழல்பகுதி, நீர்நிலை உள்ள பகுதி மற்றும் மேட்டுப் பாங்கான பகுதிகளில் இடுகின்றனவா எனவும், எச்சங்கள் மறைய ஆகும் கால அளவு குறித்தும், ஜிபிஎஸ் கருவி, வியூ பைண்டர், காம்பஸ் உதவியுடன் கணக்கெடுப்பு பணி மேற் கொண்டு வருகின்றனர். வெள்ளியன்று பவானிசாகர் வனப் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு  பணியில் கரடியின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.  இதில் 3 நாட்களுக்கு பகுதிவாரி  கணக்கெடுப்பும், 3 நாட்க ளுக்கு நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெறுவதாக வும், ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாக சத்தியமங்க லம் புலி காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு பேருந்துகள்

சேலம், டிச.2- கார்த்திகை தீப திருவிழா டிச.6 ஆம் தேதி கொண்டா டப்படுகிறது. இவ்விழா விற்கு வரும் பொதுமக்க ளின் வசதிக்காக போக்கு வரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சேலம் மண்ட லத்திலிருந்து 270, தருமபுரி மண்டலத்திலிருந்து 230 என  மொத்தம் 500 சிறப்பு பேருந் துகள் டிச.5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை இயக்கப் படவுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து துறை சார் பில் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கள் 9 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 


 

 

 

;