districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி  டாஸ்மாக் ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம்

திருப்பூர், ஜூன் 22 - திருப்பூர் மாநகரத்தில் உள்ள 110 டாஸ்மாக் கடைகள் உட் பட இம்மாவட்டம் முழுவதும் உள்ள 248 மதுபான சில்லறை  விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் மேற்பார்வையாளர்கள்,விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என  மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்  அனுப்பியுள்ளனர். சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைமை  முடிவுப்படி, டாஸ்மாக் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அஞ்சல்  நிலையங்களில் இருந்து முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கத்தை நடத்தினர். திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்  சங்கத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து  டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வேலை  செய்வோர் தனித்தனியாக கடிதம் எழுதி அஞ்சலகம் மூலம்  முதலமைச்சருக்கு அனுப்பினர் என்று டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு தெரிவித்தார்.

மனுவுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கவில்லை: பொதுமக்கள் புகார்

அவிநாசி, ஜூன் 22- அவிநாசியில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உங்களை தேடி உங்கள்  ஊர் திட்டத்தில் கோரிக்கை மனு அளித்தவர்க ளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கவில்லை என  பொதுமக்கள் புகார் கூறுயுள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில், அவிநாசி பேரூ ராட்சி, கிராமப்புற ஊராட்சி, புதிய பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை உள் ளிட்ட இடங்களில் ஜூன் 19 ஆம் தேதி மாவட்ட  ஆட்சியர் முகாமிட்டு ஆய்வு மேற்கொண் டார். அதன்பின், வட்டாட்சியர் அலுவலகத் தில் மக்கள் குறைகளை கேட்டு மனுக்களை  பெற்றார். இதில், 400க்கும் மேற்பட்ட மனுக் கள் அளிக்கப்பட்டது. இதில், கோரிக்கை மனு  அளித்த பொது மக்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தெரி விக்கின்றனர். வாரம் தோறும் திங்கட்கிழமை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்க ளுக்கு ஒப்புகைச் சீட்டு அளிக்கப்பட்டு வரு கிறது. ஆனால் உங்களைத் தேடி உங்கள் ஊர்  திட்டத்தில் அளிக்கப்படுகின்ற மனுக்களுக்கு  ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாவில்லை. இத னால், அளிக்கப்பட்ட மனு எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற் படும். எனவே மாவட்ட நிர்வாகம் உங்களைத்  தேடி உங்கள் ஊர் திட்டத்தில் மனு அளித்தவர் களுக்கு தபால் மூலமோ அல்லது வேறு வகை யில் ஒப்புகை சீட்டு அளிக்க ஏற்பாடு செய்ய  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

நாளை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு திருப்பூர், ஜூன் 22- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மே 30 முதல் ஜூன்  15 வரை முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம்  உள்ள 808 இடங்கள் முதல்கட்டக் கலந்தாய்வில் 575 இடங்கள்  நிரம்பி உள்ளன. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும்  மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெற உள்ள நிலையில் வணிகவியல் பாடப்பிரிவுகளில் +2  தொழிற்கல்வி பிரிவில் (வொகேஷனல்) 16 இடங்கள் மட்டுமே  காலியாக உள்ளன. அறிவியல் பாடப்பிரிவுகளில் 152 இடங்க ளும் கலைப்பிரிவுகளில் 11 இடங்களும், இலக்கியப் பிரிவுக ளில் 52  இடங்களும் காலியாக உள்ளன. ஜூன் 24 ஆம்  தேதி அறிவியல் பாடத் தரவரிசை 4015 முதல் 5350 வரையில்  உள்ளவர்களுக்கும் ஜூன் 25 ஆம் தேதி வணிகவியல், கலை,  இலக்கியப் பாடப்பிரிவுகளில் தொழில்பிரிவில் படித்தவர்க ளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் காலியாக உள்ள இடங்க ளுக்கு  கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல் வர் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகளை செய்து தர சிபிஎம் வலியுறுத்தல்

அடிப்படை வசதிகளை செய்து தர சிபிஎம் வலியுறுத்தல் அவிநாசி, ஜூன் 22- வஞ்சிபாளையம் வடக்கு கிளை சார்பில் கோரிக்கை மனு  அளித்துள்ளனர். அவிநாசியில் நடைபெற்ற ஜமாபந்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதி நாடார் காலனி யில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு  பகுதிக்கு மட்டும், தெரு விளக்கு, குடிநீர் குழாய் அமைத்துக்  கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதிக்கு குடிநீர் குழாய்,  தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே உடனடியாக தெரு  விளக்கு, குடிநீர் குழாய் ஆகியவை அமைத்துத் தர வேண்டும்.  அதேபோல், மேற்கு வஞ்சிபாளையம் ஏடி காலனி பகுதியில்  கடந்த 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்  தூர் வாராமல் உள்ளது. இதனால் சாக்கடை நீர் சாலையில்  செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சாக்கடை கால்வாய் சீரமைத்து தர வேண்டும். சௌடாம்பிகா  நகர் பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பம் செல்வதால், அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்சார வாரியம் மறுக்கிறது. எனவே வேறு பாதை யில் உயர் மின்னழுத்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், கிளைச் செய லாளர் கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர், ஜூன் 22- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திரு நங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு நலவாரிய அடையாள  அட்டை ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை,  முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுஷ் மான் பாரத் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சி தாதேவி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகு மார், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

‘ஷவர்மா’ சாப்பிட்டு சிறுமி பலி: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

நாமக்கல், ஜூன் 22- நாமக்கல்லில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சா.பே.புதூ ரைச் சேர்ந்த தவக்குமார் என்பவரின் மனைவி சுஜாதா (42), மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல் நகரில், பரமத்திசாலையில் உள்ள தனியார் உணவகம் (IWINS HOTEL) ஒன்றில் ‘சிக்கன் ஷவர்மா’ பார்சல் வாங்கி வந்து, எனது குழந்தைகள் சாப்பிட்டனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கலையரசியின் உடல் நலம் மோசமடைந்ததால் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனிறி உயிரி ழந்துவிட்டார். கலையரசி, பூபதி ஆகியோருக்கு உணவகத்தின் பார்சல் வாங்கி வந்த நாளில் உணவு சாப்பிட்ட 43 பேருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் தரம் குறைந்த உணவை தயாரித்து வழங்கியதுதான் கலையரசின் இறப்புக்கும், மற்றவர்க ளின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கும் காரணமாகும். நாமக்கல் மாவட்ட ஆட்சி யரும், உணவு பாதுகாப்பு அலுவலரும், உணவு பாதுகாப்பு சட்டப்படி தரமான உணவு உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கவனிக்க தவறிவிட்டனர். கலையரசியின் இறப் பிற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் உண வாக உரிமையாளர் வழங்க வேண்டும். மேலும், இதே உணவகத்தில் சாப் பிட்டு பாதிக்கப்பட்ட 43 வாடிக்கையா ளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலையரசியின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கில் அவருக்கு இழப் பீடு கேட்டுள்ளதோடு, பாதிக்கப்பட் டுள்ள அடையாளம் தெரியாத நபர்க ளுக்கும் இழப்பீடு கேட்டுள்ளார். இந்நி லையில், புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, நுகர்வோர் பொதுநல வழக் காக கலையரசியின் தாயார் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு நீதி மன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தேதி யான ஜூலை 19 ஆம் தேதியன்று உண வக உரிமையாளரும், மாவட்ட ஆட்சி யரும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரும் பதிலளிக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோ லா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

திப்ருகருக்கு தினசரி ரயில் இயக்கம்

திப்ருகருக்கு தினசரி ரயில் இயக்கம் சேலம், ஜூன் 22- கன்னியாகுமரி - திப்ருகர் மற்றும் திப்ருகர் - கன்னியா குமரி விரைவு ரயில்கள் வாரத்துக்கு 5 முறை கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ரயில்கள் தினசரி ரயில்க ளாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, திப்ருகர் - கன்னியா குமரி விரைவு ரயில் (எண்: 22504) வருகிற ஜூலை 8 ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படும். இதேபோல, கன்னியாகுமரி - திப்ருகர் விரைவு ரயில் (எண்: 22503) ஜூலை 12 ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்ப டும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தாமதமாகும் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி

தாமதமாகும் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நாமக்கல், ஜூன் 22- குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தாமதமாவதால் சாலை யில் செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் சுற்றுவட்டார அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக காவிரி  குடிநீர் விநியோகம் செய்வதற்காக கீழ்நிலை தொட்டி அமைக் கும் பணிகள் தனியார் நிறுவனம் மூலம்  நடைபெற்று வரு கிறது. சாலைகளின் ஓரத்தில் குழாய்கள் பதிக்க வேண்டிய  நிலையில் சிறிய சாலைகளின் ஓரங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் மிக மெத்தனப் போக்கிலும், சாலை ஓரங்களில் தோண்டி எடுக்கும் மண்களை அப்படியே விட்டு சொல்வதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்க ளில் செல்வோர் கீழே விழுந்து கை கால் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாய் பணி களுக்காக தோண்டப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்பனை குறித்து  வாட்ஸ் அப்-பில் புகாரளிக்கலாம்

கள்ளச்சாராயம் விற்பனை குறித்து  வாட்ஸ் அப்-பில் புகாரளிக்கலாம் தருமபுரி, ஜூன் 22- கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான புகார்களை தரும புரி மாவட்ட பொதுமக்கள் 63690 28922 என்கிற வாட்ஸ் அப்  எண் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள் ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து  ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், கள்ளச்சாராயம், சட்ட  விரோத மதுபானம் விற்பனை தடுப்பு குறித்து வருவாய்த் துறை, காவல் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரி களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாதம் இரு முறை நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான புகார்களை 63690 28922 என்கிற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்க லாம், என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கோட்டாட்சியர்கள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் நாமக்கல், ஜூன் 22- போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக் கிய இருசக்கர வாகன ஓட்டிகள் 80 பேருக்கு போக்கு வரத்து போலீசார் அபராதம் விதித்தனர். நமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், காவிரி  பாலம் சோதனை சாவடி, மோகனூர் சாலை, நான்கு சாலை,  கபிலர்மலை, பாண்டமங்கலம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக போக்கு வரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில்,  போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இருசக்கர வாகன ஓட்டிகள் 80 பேருக்கு அபராதமாக ரூ.70 ஆயிரம் விதிக்கப்பட் டது.

குடியிருப்பில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வலியுறுத்தல்

சேலம், ஜூன் 22- குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்க ளில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என சேலம் மாமன்ற உறுப் பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் மேயர் ஆ.ராமச்சந்திரன் தலைமை யில், மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெறு கிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. போடி நாயக்கன்பட்டி ஏரி சீரமைக்கப்பட்டு வருவ தைப் போன்று, அதன் அருகே உள்ள ஓடை யையும் சீரமைக்க வேண்டும். இதேபோல, 60 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழைக் காலங்களில் அதிக தண்ணீர் தேங்குவதால், குறிஞ்சி நகர் ஓடையை சீரமைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மண்டலக்குழுத் தலை வர் அசோகன் பேசுகையில், சீலநாயக்கன் பட்டி பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கு வதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள், மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டு அப்பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும், என் றார். தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்குட் பட்ட பகுதியில் தெருநாய்கள் தொல்லை,  கொசுக்கள் அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்கள் பேசினர். முடிவில், மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர் பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம் பவத்தைக் கண்டித்து, மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

பள்ளி மாணவன் மீது தாக்குதல்

பள்ளி மாணவன் மீது தாக்குதல் சேலம், ஜூன் 22- சேலத்தில் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறி, 11  ஆம் வகுப்பு மாணவரை தாக் கிய நபரை காவல் துறையி னர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், அன்ன தானப்பட்டி, சண்முகா நகர், சிங்கார முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் பிரகாஷ் (எ) எலி பிர காஷ் (27). இவரது வீட்டின்  அருகே அதேபகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாண வன் அமர்ந்து கொண்டி ருந்தார். அந்த மாணவனி டம், மதுபாட்டில் வாங்கி வரும் படி பிரகாஷ் தெரிவித்துள் ளார். ஆனால், மாணவன் மது வாங்க போக முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மாண வனுக்கு தலை மற்றும் கழுத் தில் படுகாயம் ஏற்பட்டது. இதன்பின் அவர் சிகிச்சைக் காக அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப் பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர் எலி பிர காஷ் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தலைவாசல்: கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது

சேலம், ஜூன் 22- தலைவாசல் அருகே சாராயம் விற்ப னையில் ஈடுபட்டிருந்த 4 பேரை காவல் துறை யினர் கைது செய்து, சிறையில் அடைத்த னர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாரா யம் குடித்தவர்களின் இறப்பு எண்ணிக்கை  அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட எல்லைகளில் தீவிர கள்ளச்சாராய சோத னையை நடத்த சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் உமா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருகே உள்ள சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல், ஆத்தூர், மணிவிழுந்தான், கல் வராயன் மலைக்கிராமங்களில் காவல் துறை யினர் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை யில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தலை வாசல் வட்டத்தில் ராமசேஷபுரம், சிறுவாச் சூர், மணிவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கள் ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவ தாக தலைவாசல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடி யாக போலீசார் அப்பகுதிகளுக்குச் சென்று  கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (25), ராமசாமி (58), காமக் காபாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியம் மாள் (60), வடகுமரை பகுதியைச் சேர்ந்த சிவ காமி (60) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். அதில், பெண்களை ஜாமீன் மூலம் விடுவித்த நீதிமன் றம், இருவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தது. இதில் தொடர்புடைய மற்ற நபர் களை போலீசார் தேடி வருகின்றனர்.

மலைக்கிராமங்களில் போலீசார் தீவிர சோதனை

சேலம், ஜூன் 22- ஏற்காடு மலைக்கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுகின்றதா? என் பது குறித்து காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்ப வத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்திலும் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சாராயம் விற்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் அமல அட்மின் தலைமையில், ஏற்காடு ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட காவலர்கள், ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள கிராமங் களில் தீவிர சோதனையில் ஈடுபட துவங்கி னர். ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிரா மங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று  சோதனை நடத்தப்பட்டது. ஏற்காடு போலீசார்  மற்றும் மதுவிலக்கு போலீசார், தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், ஆத்து ஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர  சோதனை மேற்கொண்டனர். விடிய, விடிய  போலீசார் மலைக்கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்,  சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம்  காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும். மேலும், மலைக்கிராமங்க ளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் களை ஊர் தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு நாமக்கல், ஜூன் 22- நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி  வானிலை ஆய்வு மையம் வெள்ளியன்று வெளியிட்ட செய் திக்குறிப்பில், கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6,  66.2 டிகிரி பாரன்ஹீட்டாக காணப்பட்டது. அடுத்த 5 நாட் களுக்கான வானிலையில், வானம் லேசான மேக மூட்டத்து டன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் சில இடங்களில்  லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. பகல் வெப்பம் 95,  இரவு வெப்பம் 71.6 டிகிரி அளவில் காணப்படும். சிறப்பு ஆலோ சனையாக கோழி பண்ணையாளர்கள் உயர் பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வாரம் இருமுறை பண்ணைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் பணி வாய்ப்பு

ஈரோடு, ஜுன் 22- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேளாளர், புள்ளியியல் உதவியாளர், நகர  சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணி யிடங்களை நிரப்ப உள்ள நிலையில், இதற் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இது குறித்து மேலும், ஈரோடு மாநக ராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது, சுகாதார மேளாளர் மற் றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடம் முற் றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படை யில் நிரப்பப்படும். மாத சம்பளம் ரூ.25 ஆயி ரம் வழங்கப்படும். பொது சுகாதார மேலா ளர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் (விலங்கியல் (அல்லது) பூச்சியியல் ஒரு  பாடமாக உள்ள பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். புள்ளியியல் உதவியா ளர் பணியிடத்திற்கு இளநிலை புள்ளியியல் அல்லது கணிணியியல் பட்டம் அல்லது பட் டம் பட்டமேற்படிப்பு முடித்த, 5 ஆண்டுக ளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்  நகர்புற சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு ஏஎன்எம் படித்தவர்கள் மற்றும் தமிழ்நாடு நர் சிங் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்யப் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.14  ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப் பிக்கலாம்.மருத்துவமனை பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்  தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்க லாம். மாதம் ரூ.8ஆயிரத்து 500 சம்பளம் வழங் கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியி டங்களும் முற்றிலும் தற்காலிகமானது. விருப்பமுடையோர் கல்வி சான்று நகல்கள்  மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப் பத்தை 5 ஜூலை 2024 க்குள் ஆணையா ளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற  முகவரிக்கு அனுப்புமாறு மாநகர நல அலு வலர் மரு.வெ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சாராய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

சாராய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை ஈரோடு, ஜூன் 22- சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கைதாகி, பின்னர் வெளியில் வந்தவர்களை ஈரோடு மாவட்ட போலீசார் நேரில்  அழைத்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில்  50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து தமிழகம்  முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே, சாராயம் காய்ச்சி கைதானவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்  நிலையங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களை  கடந்த 2 நாட்களாக போலீசார் நேரில் அழைத்து கள்ளக்கு றிச்சி சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இதுபோன்ற சம்பவங்க ளில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக்கூடாது என்று எச்ச ரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சாராய வழக் கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சாராயம்  காய்ச்சாமல் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர்க ளுக்கு போலீஸ் தரப்பில் இருந்து நன் நடத்தை சான்று வழங் கப்பட்டது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார்  நன்நடத்தை சான்றிதழ் வழங்குவார் என போலீசார் தெரிவித் துள்ளனர்.

சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஆர்வம்

சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஆர்வம் ஈரோடு, ஜூன் 22- புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந் ததால் அதை வாங்க விவசா யிகள் ஆா்வம் காட்டினா். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புன்செய் புளியம் பட்டி வாரச்சந்தை வியாழ னன்று கூடியது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து சின்ன வெங் காயம் மற்றும் விதை வெங் காயம் இங்கு விற்பனைக்கு  கொண்டு வரப்படுகிறது. அதன்படி சந்தைக்கு ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசா யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். சத்தியமங்கலம், தாள வாடி மலைப் பகுதி மற்றும்  கர்நாடக மாநிலத்தில் பரவ லாக மழை பெய்துள்ளதால் விவசாய நிலங்களில் சின்ன  வெங்காயம் சாகுபடி செய்ய  விவசாயிகள் ஆர்வம் காட்டு கின்றனர். கடந்த வாரம் கிலோ  ரூ. 60-க்கு விற்ற விதை வெங் காயம் வியாழனன்று விலை  குறைந்து கிலோ ரூ. 30 முதல்  ரூ. 40 வரை விற்பனையா னது. விதை வெங்காய விலை குறைந்ததால் விவ சாய நிலங்களில் சாகுபடி  செய்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

மின்சாரம் தாக்கி ஈஷா மைய மாணவர் பலி

மின்சாரம் தாக்கி ஈஷா மைய மாணவர் பலி கோவை, ஜூன் 22-  யோக பயிற்சிக்கு சென்ற ஈஷா யோக மையத்தின் மாண வர் ஒருவர் தண்ணீர் பைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்த தில் பரிதாபமாக உயிரிழந்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா பள்ளி மாண வர்கள் சிலர் யோகா செய்வதற்காக, பீளமேடு அருகே உள்ள  ஒரு தனியார் பள்ளிக்கு வந்திருந்தனர். பின்னர், யோகா நிகழ்ச்சி முடிந்த பிறகு சவுரிபாளை யம் ஜிவி ரெசிடென்சி பகுதியில் ஈஷா மையம் வாடகைக்கு  எடுத்துள்ள மையத்திற்கு ஓய்விற்காக சென்றனர். அங்குள்ள  அறையில் தண்ணீர் குழாயில் இருந்து மின்சாரம் பாய்ந்த தில், ஆந்திராவை சேர்ந்த மாணவர் மோச்சனா உயிரிழந் தார். அவரது உடலை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத  பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

பூங்காவில் பாம்புகள் படையெடுப்பு

பூங்காவில் பாம்புகள் படையெடுப்பு ஈரோடு, ஜுன் 22- வ.ஊ.சி.பூங்காவில் மேம்படுத்தும் பணியின் போது 6  பாம்புகள் அடுத்தடுத்து படையெடுத்தததால் பரபரப்பு ஏற்பட் டது. ஈரோட்டில் மாநகரத்தில் உள்ள வஊசி பூங்காவில், மேம்ப டுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாழ னன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பாம்பு கள் அடுத்தடுத்து ஊர்ந்து சென்றது.  இதனையடுத்து பாம்பு பிடி நிபுணரை வரவழைத்து 6  பாம்புகளை பிடித்தனர். 6 அடி வரை கொண்ட பாம்பு கள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பிடிபட்ட பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்ப டைத்தனர்.

கல்லட்டி சாலையில் தொடர் விபத்துகள்

உதகை, ஜூன் 22- கல்லட்டி சாலையில் தொடர்ந்து நடைபெ றும் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீ சார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.  உதகை - கல்லட்டி சாலை 36 கொண்டை  ஊசி வளைவு கொண்டதாகும். செங்குத் தான இச்சாலையில் செல்லும் வாகனங்கள்  குறிப்பிட்டு கியரில் செல்ல வேண்டும் என,  போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள் ளனர்.  விபத்தை தடுக்க வளைவுகளில் ஆங் காங்கே நவீன கருவிகள் அமைக்கப்பட் டுள்ளது. ஆனாலும், வெளி மாவட்டம், வெளி  மாநில வாகன ஓட்டிகள் இச்சாலையில் வாக னங்களை இயக்க போதிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த காலங்களில் சுற் றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி யது. விபத்தால் உயிர் பலி சம்பவங்கள் அதி கரித்ததை அடுத்து வெளி மாவட்டம் மற்றும்  வெளி மாநில சுற்றுலா வாகனங்கள் இச் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது.  உள்ளூர் வாகனங்கள் சென்று வருகி றது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் அடிக் கடி விபத்தில் சிக்கியது உள்ளூர் மக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வியாழனன்று மாலை இச் சாலையில் ஜீப் மீது இருசக்கர வாகனம்  மோதி விபத்துக்குள்ளானது. இச்சாலை யின் வழியாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கு, போலீசார் போக்குவரத்து விதிமுறை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத் துகளை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஹவாலா பணம் என நினைத்து காரை கடத்த முயற்சி

கோவை, ஜூன் 22- ஹவாலா பணம் என நினைத்து காரை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில் மேலும்,  ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந் தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் கொச்சி யில் விளம்பர ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரு கிறார். இவர், தனது நண்பர் சார்லஸ் உள் ளிட்ட 4 பேருடன் கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க பெங்களூருக்கு காரில் கடந்த 13- ஆம் தேதி சென்று உள்ளார். பொருள்களை வாங்கிக் கொண்டு கோவை வழியாக கேரளத்துக்கு நள்ளிரவு சென்று கொண்டு இருந்து உள்ளார். மதுக்கரை எல் & டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென 2 கார்க ளில் முகமூடி அணிந்து வந்தவர்கள் சித்திக்  வாகனத்தை மறித்தனர். மேலும், கண்ணா டியை உடைத்து, கட்டையால் தாக்கி, காரை  கடந்த முயன்று உள்ளனர்.  இதில் நிலை தடு மாறிய அவர், சுதாரித்துக்கொண்டு சித்திக்  காரை அருகில் இருந்த சுங்க சாவடிக்கு  ஓட் டிச் சென்று உள்ளார். அங்கு போலீஸார் நின்று கொண்டு இருந்ததை பார்த்த கும்பல்  தப்பிச் சென்றது. இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் அஸ்லாம் சித்திக் புகார்  அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்ப வம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்கா ணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, காரை கடத்த முயன்ற கேரள  மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24)  ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத் தனர். மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து கேர ளாவை சேர்ந்த நித்தின் (23), ஹரிஷ் குமார்  (28), ஜினி (30), அனீஸ் (38), நந்தகுமார் (31),  ராஜிவ் (35), ஜிதிஸ் (32) ஆகிய ஏழு பேரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர்.