வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
பொள்ளாச்சி, ஜூலை 10- பொள்ளாச்சி அருகே பால் வியாபாரியை வழி மறித்து ரூ.5 ஆயிரம் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த உடுமலை அருகே உள்ள துங்காவி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வீடுகள் மற்றும் கடைகளுக்கு பால் வினியோக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வியாழனன்று வழக்கம் போல் பால் விநியோகம் செய்து விட்டு, பொள் ளாச்சியை அடுத்த சூலக்கல் அருகே உள்ள தரைப் பாலம் பகுதியில் தனது இருசக்கர வானகத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் திடீரென முத்துக்குமாரை வழி மறித்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயி ரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனை தொடர்ந்து முத்துக்குமார் அளித்த புகா ரின் பேரில் வடக்கிபாளையம் காவல் துறையினர் குற்ற வாளிகளை தேடி வந்தனர். அதன்படி இளங்கோவன் மற்றும் லோகநாதன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத் தில் ஈடுபட்ட இருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்ற னர்.
மாநில அளவிலான நீச்சல் போட்டி
சேலம், ஜூலை 10- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட நீச்சல் கழகம் சார்பில் மாநில அள விலான நீச்சல் போட்டி நான்கு ரோட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. இந்த போட்டியில் சேலம், நாமக் கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 250 பேர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 40 பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஒரு வயது முதல் 18 வயது குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நீச்சல் சங்க மாவட்ட தலைவர் ஜெய சூரியன், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பரிசு வழங்கி னர். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக, இப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் விஜய குமார், மாவட்ட தலைவர் ஞானசேகரன், செயலாளர் சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
ஓய்வூதியர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழ் வீடு தேடி வழங்கும் திட்டம்
கோவை, ஜூலை 10- ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன். இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் வங்கி புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கொரோனோவால் கடந்த 2 ஆண்டு களாக உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வீட்டிலி ருந்தபடியே ஜீவன் பிரமான் திட்டத்தில் உயிர் வாழ் சான்றிதழ் பெறலாம். இதற்கான கட்ட ணம் ரூ.70 செலுத்த வேண்டும். நேரில் சென்று வாழ்வுரிமை சான்று சமர்ப்பிக்க முடியாத வர்கள், தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ எண், ஓய்வூதிய கணக்கு விபரங் களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம். இதனை தகுதியுடைய அனைவரும் பயன்ப டுத்தி கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ.13.74 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
உதகை, ஜூலை 10- குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ.13.74 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானதாக தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூரிலுள்ள தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. இந்த ஏலம் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் மூலம் வாரந்தோ றும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட் கள் நடத்தப்படுகின்றன. தேயிலை ஏலத் தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கின்றனர். குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப் பினர்களாக உள்ள வர்த்தகர்கள் மட் டுமே ஏலத்தில் பங்கு பெற முடியும். விற் பனை எண் 27க்கான ஏலம் கடந்த ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 24 லட்சத்து 43 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந் தது. இதில் 18 லட்சத்து 64 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 79 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 74 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 17 லட்சத்து 72 ஆயிரம் கிலோவாகும். மொத்தம் ரூ.13 கோடியே 74 லட்சத்துக்கு விற்பனை யானது. விற்பனையான அனைத்து தேயிலை தூளின் சராசரி விலை கிலோ ஒன்று 77 ரூபாய் 60 காசு என்ற சராசரி விலையில் ஏலம் போனது. சிடிசி தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ஒன்று ரூ.290க்கும், ஆர்தோ டக்ஸ் தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலை ரூ.252க்கும் ஏலம் போனது. சரா சரி விலையாக இலை ரகத்தின் சாதா ரண வகை கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ. 63 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்று ரூ.154 முதல் ரூ.256 வரை விற்பனை ஆனது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.62 முதல் ரூ.69 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்று ரூ.164 முதல் ரூ.226 வரையும் ஏலம் போனது. விற்பனை எண் 28க்கான ஏலம் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என ஏல நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.
விபத்தில் பள்ளி மாணவன் பலி
தருமபுரி, ஜூலை 10- தருமபுரியை அடுத்த காட்டம்பட்டியை சேர்ந்தவர் பூவரசன் (16). 11 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், அப் பகுதியில் நடைபெற்ற திரு விழாவைக்காண இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற் றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட் டது. இதில் படுகாயமடைந்த பூவரசன் தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம னையில், சிகிக்சை பெற்று வந்த நிலையில், ஞாயிறன்று பூவரசன் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை குண்டர் சட்டத்தில் இருவர் கைது
திருப்பூர், ஜூலை 10- அவினாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னாரிப்பட்டி சுடுகாட்டுக்கு அருகில் ஜுன் 13 ஆம் தேதி கள்ளச்சாராயம் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் மறைவாக இருந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். கள்ளகுறிச்சி மாவட்டம் தொரங்கூர் கிராமம் கலியமூர்த்தி (26), அதே மாவட்டம் வண்ட கப்பாடி கிராமம் திருமூர்த்தி (19) ஆகியோர் முட்புதரில் விச நெடியுடன் கூடிய கள்ளசாராயம் 80 லிட்டர் வைத்திருந்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை கைது செய்தும் மேற்படி கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தும் அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் குற்றவாளிகள் கலிய மூர்த்தி மற்றும் திருமூர்த்தி ஆகியோரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
அவிநாசி, ஜூலை 10- அவிநாசியில், ராமநாதபுரம், உப்பிலிபா ளையம் ஊராட்சி பகுதிகளில் சனியன்று ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறு விறுப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இடங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதன்படி அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக இருந்த ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு சனியன்று தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு ஊராட்சிகளின் மொத்த வாக் காளர் எண்ணிக்கை 5482. மொத்தம் 4283 வாக் குகள் இறுதியில் பதிவாகின. அதேபோல ஐயம்பாளையம் ஊராட்சியில் காலியாக இருந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 180 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில், 146 வாக்குகள் பதி வாகின. மொத்தம் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மின்தடை அறிவிப்பு
திருப்பூர், ஜூன் 10- கன்னூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் திங்களன்று (ஜூலை11) பராமரிப்பு பணி நடைபெற வுள்ளதால், கானூர், அல்ப் பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளை யம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசரா பாளையம், ஆம்போதி, பசூர், பெத்தநாயக்கன் பாளையம், பூசாரிபாளை யம், டையர்பாளையம், சல் லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர், மேட்டுப்பாளை யம், மேட்டுக்காட்டுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுக் காளையம், பூலுவபாளை யம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோம் இருக்காது என அவினாசி மின்பகிர்மான வட்ட செயற் பொறியாளர் விஜயஈஸ்வ ரன் தெரிவித்துள்ளார்.
காவலர் குடும்பத்தினரின் விளையாட்டு போட்டிகள்
கோவை, ஜூலை 10- கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தார் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை பி.ஆர்.எஸ் வளாகத்திலுள்ள மாநகர ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிள் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத் தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி ஆணையர் சேகர் பங்கேற்றார். முன்னதாக இந்த போட்டிகளில் போலீசார் மற்றும் அவர்க ளது குடும்பத்தினர், குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்ற னர்.
கோத்தகிரியில் புதிய உழவர் சந்தை இடத்தை மாற்ற வியாபாரிகள் வலியுறுத்தல்
உதகை, ஜூலை 10- கோத்தகிரியில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை மாற்ற வேண்டும் என மார்க்கெட் வியா பாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக கோத்தகிரி மார்க்கெட் சங்க தலைவர் விவேகா னந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் வட் டாட்சியரிடம் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கோத்தகிரி பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுப்பது வர வேற்கத்தக்கது. கோத்தகிரி கடை வீதி பகுதியில் அனைத்து வசதிகளு டன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கவும் உத்தர விடப்பட்டது. ஆனால், பேருந்துகள் அந்த வழியாக இயக்கபடாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரி களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதா லும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது. கடந்த மாதம் மார்க்கெட்டையொட்டியுள்ள பகுதி யில் தற்போது செயல்பட்டு வரும் கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாக தெரிகிறது. அவ் வாறு மார்க்கெட்டையொட்டி உழவர் சந்தை அமைப்பதற்காக தேர்வு செய் யப்பட்ட இடத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்றினால், அங்குள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரி கள் கடையை இழக்க நேரிடுவது டன், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, மார்க்கெட்டிற்கு வெகு அருகாமையில் உழவர் சந்தை அமைப்பதைத் தவிர்த்து வேறு பகுதி யில் உழவர் சந்தையை அமைக் கவோ அல்லது அரசுப்பணம் விரய மாகாமல் தடுக்கும் வகையில் ஏற்க னவே அனைத்து வசதிகளுடன் கடை வீதி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி, மீண்டும் செயல்படுத்தவோ அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
போலீசாரை தாக்கிய மதுப்பிரியர்கள் இருவர் கைது
கோவை, ஜூலை 10– மதுபோதையில் போலிசாரை தாக்கியும், போலிசார் வாக னத்தின் கண்ணாடியை உடைத்தும் தகறாறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டனர். கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலையில் டாஸ் மாக் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று இரவு நான்கு பேர் மது அருந்தி கொண்டிந்தனர். பின்னர் இரவு 11.45 மணியாகியும் அவர்கள் மதுக்கூடத்தை விட்டு செல்லாமல் இருந்தனர். இதனால் ஊழியர்களுக்கும், அந்த இளைஞர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, எச்சரித்து விட்டு சென்றனர். பின்னர் போலீசார் ரோந்து வாகனத்தில் என்.எஸ்.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்தொடர்து வந்த மதுக்கூடத் தில் தகராறு செய்த அதே கும்பல், போலீசாரை வழிமறித்து, தக ராறில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து குத்த முயற்சி செய்தனர். தொடர்ந்து பீர் பாட்டிலால் போலீஸ் ஜீப் கண்ணாடியை அடித்து உடைத்தனர். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் அந்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீஸ்காரரை தாக்கி போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்தது சாய்பாபாகாலனி அண்ணாநகரை சேர்ந்த பூ வியாபாரி ஷேக் இஸ்மாயில் (27), அவரது நண்பர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த விஸ்வா(25), பரத் (24), விக்னேஷ்(26) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷேக் இஸ்மாயில், விஸ்வா ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒகேனக்கல் அருவில் குளிக்க தடை
தருமபுரி, ஜூலை 10- தருமபுரி மாவட்டம், ஒகே னக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிறன்று காலை 6 மணி நிலவரப்படி 6 ஆயிரம் கன அடியாக வந்தது. பின்னர் 11 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. விடுமுறை தினமான ஞாயி றன்று ஒகேனக்கல்லில் சுற் றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையே, அருவியில் குளிக்க அனுமதித்த நிலை யில், தற்போது காவிரி ஆற் றில் நீர்வரத்து அதிகரித்த தால் குளிக்கவும், பரிசல் இயக் கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் மெயின் அருவிகள், காவிரி ஆற்றில் குளித்தவர்களை போலீசார் வெளியேற்றினர்.