districts

img

சாலைகள் சீரமைக்கும் பணி குறித்து ஆய்வு

கோபி, ஆக.28- நம்பியூர் பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிர தான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நம்பியூர் உட்கோட்டத் தில் போக்குவரத்து அதிகமாக காணப் படும் சாலைகளை ஆய்வு செய்து, ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை சீரமைக் கப்பட வேண்டிய சாலைகளை புதிய தார்சாலைகளாக சீரமைக்கப்படும். அந்த வகையில், கோவை, திருப்பூர், புளியம்பட்டி, அன்னூர், மேட்டுப்பா ளையம், சேயூர், உள்ளிட்ட பகுதிக ளுக்கு போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக சென்று வரும் சாலையாக  கோவை பிரிவு - சேயூர் சாலை உள்ளது. இச்சாலையை ஐந்து ஆண் டிற்கு ஒருமுறை சீரமைக்கும் பணியில் கோட்டப் பொறியாளர் ஆலோசனைபடி நம்பியூர் உதவி கோட்டப் பொறியாளர், உதவிப்பொறியாளர் முன்னிலையில் கோவை பிரிவு முதல் அளுக்குளி வரை  உள்ள சாலையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், சாலை அமைக்கும்போது சாலையின் இருபுறமும் நீள அகல அளவுகளை சரி பார்த்து, தார்கலவை யின் தரம் குறித்து ஆய்வு செய்து சாலையை தரமாக அமைப்பதை உறுதி செய்து வருகின்றனர். மேலும், போக்கு வரத்து வாகனங்களுக்கு இடையூறு இன்றி எச்சரிக்கை பலகைகள் வைக்கப் பட்டு சாலை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரி வித்தனர்.