புதுதில்லி, ஜூலை 14- மனுவில் உள்ள தவறுகள், போதிய விவரங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் உச்சநீதி மன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவை யிலேயே உள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவின்படி நீதிமன்றப் பதிவாளர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஜூலை மாதம் வரை மொத்தம் 59,695 வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இதில், 13,563 வழக்குகள் தொடர்பான மனுக் களில் போதிய விவரங்கள் அளிக்கப்படவில்லை. மேலும், அவற்றில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
முறையான விவரங்கள் இல்லாத வழக்குகளைத் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு தலைமை நீதிபதி நான்கு வார கால அவகாசம் அளித் துள்ளார். அதற்குள் மனுக்களில் அவர் கள் தேவையான திருத்தங்களைச் செய்யாவிட்டால், வழக்குகள் தள்ளு படி செய்யப்படும் என்றும் தெரிவி க்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, மனு தாக்கல் செய்வது, மேல்முறையீடு செய்வது போன்றவற்றில் சில குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. இவை முழுமையாகக் கடைப்பிடிக்கப் பட்டால் மட்டுமே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும். தவறுகளுடன் மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, அவை விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்துவிடுகின்றன. இவற்றில் தலித், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளும் ஏராளம் உள்ளன.