districts

img

தளபதி 66க்கு ஒரு நெருக்கடி...

நெல்சன் திலீப்குமார் இயக்கத் தில் விஜய் நடிக்கும் சன் பிக்சர்சின் பீட்ஸ் படம் வரும் ஏப்ரலில் வெளி வரப்போகிறதாம். அதனைத் தொடர்ந்து விஜய்யின் 66 வது  படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கவுள் ளார். இந்த தளபதி 66 படம் மார்ச் சில் படப்பிடிப்பு தொடங்கி, இந்த  ஆண்டின் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்கி றார்கள்.  தற்போது அதன் கதையமைப்பில் ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ள தாம். அதாவது, துவக்க காலத்தில் விஜய் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற குடும்பப் பாங்கான படங்களிலேயே நடித்து வந்தார். பின்னா ளில் மாஸ் ஹீரோவாக தலைவா, தெறி, துப்பாக்கி, மாஸ்டர் என்று போய் விட்டதால் இந்த தளபதி 66 ன் கதையமைப்பை உருவாக்குவதில்தான் அந்த நெருக்கடியாம். இருந்தாலும் ஆக்சன், சென்டிமென்ட், பாடல்கள் என்று உணர்ச்சி மயமாகவே இதனை உருவாக்கப் போகிறார்களாம்.  எப்படியோ தமிழ் சினிமாவுக்கு எப்போதும் சோதனைதான்போல.