சென்னையில் மாணவர் சங்க நிர்வாகிகளை தகாத வார்த்தைகளைப் பேசி, கைது செய்த காவல் துறையைக் கண்டித்து, வியாழனன்று கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் கு.பாவெல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அகமது ஜூல்ஃபிகர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தினேஷ்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.