districts

img

நாமக்கல்: ரேசன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்

நாமக்கல், ஜூலை 4- ஈசானம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர  வலியுறுத்தி அப்பகுதி பொதுமக் கள் ரேசன் அட்டை, வாக்காளர்  அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், ஈசானம் ஊராட்சிக்குட்பட்ட வீனஸ் காலனி யில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகு தியில் சாலை, மயானம், பெண்க ளுக்கு தனி கழிப்பிட வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து  தரவில்லை. மேலும், சிலர் ஓடை, நீர்த்தேக்க புறம்போக்கு நிலங் களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் கைப்பற்றி எங்க ளுக்கு தேவையான சாலை, மயா னம், வீடு இல்லாதவர்களுக்கு வீட் டுமனை பட்டா வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இதுகுறித்து பலமுறை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட் சியர், முதல்வர் தனிப்பிரிவு ஆகி யோரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனையடுத்து திங்க ளன்று ஈசானம் ஊராட்சி பகுதி மக் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட வைகளை ஆட்சியரிடம் ஒப்படைக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கழிப்பிட வசதி கேட்டு மனு திருச்செங்கோடு அருகே உள்ள டி.சாலப்பாளையம் 14 ஆவது வார் டுக்குட்பட்ட பகுதியில் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை, திறந்தவெளி பொது கழிப்பிடமாக பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இதனால்  சுகாதார சீர்கேடுகள் தொற்று நோய் கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் கள் ஆண்களுக்கு இலவச பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என  வலியுறுத்தி அப்பகுதியினர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;