districts

போராட்டமே நமது உரிமைகளைப் பாதுகாக்கும் வழி - எம்.சீனிவாசன் பேச்சு

கோவை, செப். 20- போராட்டமே நமது உரிமைகளை வென்றெடுக்கும் என நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநில மாநாட் டில், அரசு ஊழியர் சங்க பொதுச்செய லாளர் எம்.சீனிவாசன் தெரிவித்தார். கோவை ஏகேஏ & ஸ்ரீ விஜயலட்சுமி  கல்யாண மண்டபத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத் தின் 8ஆவது மாநில மாநாடு நடைபெற் றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.சீனி வாசன் பேசுகையில், அரசுப் பணியில்  சேர்வதற்கான முக்கிய காரணங்களில்  ஒன்று, வேலைக்கான உத்தரவாதமும்  ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் ஓய்வூதிய மும். ஆனால், 2004-க்கு பிறகு பணியில்  சேர்ந்த ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூ தியத் திட்டம் பெரும் நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது. ஒரு அலுவலகத் தின் கண்காணிப்பாளராகப் பணி யாற்றி ஓய்வுபெற்ற ஒருவர், தனக்கு  ஓய்வூதியம் இல்லாததால், அலுவலகத் திலேயே மாதம் ரூ. 5,000 சம்பளத்துக் குத் துப்புரவுப் பணியாளராக வேலை  கேட்டுள்ளார். இது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மிக மோசமான விளை வைக் காட்டுகிறது.  இந்த விவகாரத்தில் நிதி நெருக்கடி யைக் காரணம் காட்டுவது சரியல்ல. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, இமாச்ச லப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதி யத் திட்டம் தொடர்ந்து அமலில் உள் ளது. இதனால் அந்த மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறை எதுவும் ஏற்பட வில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது  அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத் தாது, மாறாக லாபத்தையே தரும். என வே, நிதி நெருக்கடி என்பது ஒரு பொய் யான காரணம். எந்தவொரு அரசாங்கமும் தாமாக  முன்வந்து ஊழியர்களுக்கு உரிமை களையும் சலுகைகளையும் கொடுத்த தில்லை. கடந்த காலத்தில் போராட்டங் கள் மூலமே நமது உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். செப்டம்பர் 30-ஆம்  தேதி நடைபெறவிருக்கும் போராட் டத்தில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர் கள் முழுமையாகப் பங்கேற்று நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்  என்றார். முன்னதாக மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு பொதுபணித்துறை கணக்கு  மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆ.செல்வம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் டி. கண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட் டக்கணக்கர் சங்க பொதுச் செயலா ளர் ஜே. சதீஷ், தமிழ்நாடு சாலை ஆய் வாளர் சங்க பொதுச் செயலாளர் டி. திரு முருகன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க  மாநிலத்தலைவர் எம். பாலசுப்பிரமணி யன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணைப்  பொதுச்செயலாளர் பி. செந்தில்குமார். அரசு ஊழியர் சங்க கோவை மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.