districts

img

தலித் மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் அறிவிப்பு

ஈரோடு, மார்ச் 25- தலித் மக்களுக்கு ஆதரவாக தமிழ் நாடு சிறுபான்மை நலக்குழு உண்ணா விரதம் அறிவித்த நிலையில், காவல் துறை தடை செய்துள்ளது. பிரச்சனை களுக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் நீதி கேட்டு போராட்டத்தை தீவிரப்படுத்து வோம் என அச்சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம் பட்டி நகராட்சி வாரச்சந்தையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள் நகர் மன்ற துணை தலைவர் சிதம்பரத்தின் தூண்டு தலால் திடீரென அகற்றப்பட்டது. இத னால், 13 தலித் குடும்பங்கள் நிர்க்கதி யாக நிற்கிறது. திமுக அரசிற்கு அவப் பெயரை உண்டாக்கும் நோக்கத்துடன் கடைகள் இடிப்பு சம்பவம் நடைபெற் றுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு குற்றம்சாட்டியுள்ளது.  இதனையடுத்து, சிதம்பரத்தை பத வியிலிருந்து நீக்க வேண்டும். வாழ்வா தாரத்தை இழந்து தவிக்கும் மாட்டி றைச்சி வியாபாரிகளான அருந்ததிய மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண் டும் என வலியுறுத்தி நகராட்சி அலுவல கம் முன்பு சனியன்று காலை உண்ணா விரத போராட்டம் துவங்கியது.

மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி, உதவி தலைவர்கள் டி.விஜயகுமார், டி.சுப்பிர மணி ஆகியோர் தலைமையில், மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து, தமிழக  மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலக் குழு உறுப்பினர் கே.துரைராஜ், சி.முரு கேசன், நலக்குழுவின் பொருளாளர் மற் றும் கடைகளை இழந்தவர்கள் உள் ளிட்ட பலர் இப்போராட்டத்தில் பங்கேற் றனர். முன்னதாக, உண்ணாவிரத போராட் டம் நடைபெறும் இடத்திற்கு வந்த  போலீசார் போராட்டத்திற்கு அனுமதி யில்லை என எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தை நடத்தவிடாமல் தடுத்தனர். இத னையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேசம யம் நீதி கிடைக்காவிடில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்துவோம் என் றும், தலித் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையில், எவ்வித சமரசமும் இன்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தலை வர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

;