districts

img

காரணத்தின் அடிப்படையிலேயே கதைகள்

தருமபுரி, செப்.15- காரணத்தின் அடிப்படை யிலேயே கதைகள் எழுதப் படுவதாக தருமபுரி புத்தகத்  திருவிழாவில் எழுத்தாளர்  சோ.தர்மன் தெரிவித்தார். தருமபுரி வள்ளலார் திடலில் நடை பெற்றுவரும் புத்தக திருவிழாவில் வியாழ னன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக் குநர் சாமிநாதன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சிங்காரவேலு  வரவேற்றார். எஸ்எஸ்எஸ் நகைக்கடை சக்தி வேல், நூலகர் சரவணன், கவிஞர் கே. முருகன், பூவிதழ் உமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் “சக்தி  பிறக்குது மூச்சினிலே” என்ற தலைப்பில்  கவிஞர் சக்தி ஜோதி பேசினார். இதன்பின்  “கதைகதையாம் காரணமாம்” என்ற தலைப் பில் எழுத்தாளர் சோ.தர்மன் பேசுகையில்,  புத்தக வாசிப்பு மனிதனை பக்குவப் படுத்துகிறது. எல்லா கதைகளுக்கும் ஒரு காரணம் உண்டு. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. காரணத்தின் அடிப் படையிலேயே கதைகள் எழுதப்படுகிறது. புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங் கள் வாசிப்பதால் உணர்வுபூர்வமான சிந்த னைகள் ஏற்படும், என்றார். இந்நிகழ்ச்சியில் அரசு தணிக்கைத்துறை அலுவலர் பி.எஸ்.இளவேனில், இந்திய மருத்துவ சங்க தலைவர் ச.சரவணன், ஆசிரியர் அறிவுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பூங்குன்றன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூல்கள் வெளியீடு இதைத்தொடர்ந்து, வெள்ளியன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் கலை இலக்கிய நிகழ்ச்சி மற்றும் நூல் அறிமுக விழா  நடைபெற்றது. தமுஎகச மாவட்டப் பொருளாளர் ஆதிமுதல்வன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.சிங்காரவேலு வரவேற்றார். கவிஞர் ரவீந்திரபாரதி எழுதிய “நீரோட்டம்” என்ற  நாவலை நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் ரங்கராஜன் வெளியிட, தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கவிஞர் ஆதிமுதல்வன் எழுதிய “மரக்கா” நாவலை தமுஎகச மாவட்டத் தலைவர் எ.கொ.அம்பேத்கர் வெளியிட, ஆசிரியர் கூத்தப்பாடி பழனி பெற்றுக்கொண்டார்.  கவிஞர்கள் நவகவி, சுகந்தி பாஸ்கர் ஆகியோர் கவிதை வாசித்தனர். இதில் கலை இலக்கியப் பெருமன்ற  மாவட்டச் செயலாளர் கே.சின்னக்கண்ணன் உள் ளிட்ட திரானோர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், அரூர்  வெற்றிவேல் சிலம்பம் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது. முடிவில் ஓவியர் செ.வீரபத்திரன் நன்றி கூறினார்.