வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்க
உதகை, நவ.11- இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார பயணம் நடைபெற்றது. இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்திட வேண்டும். அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையை மாற்றி, ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண் டும். அரசு துறைகளில் காலி யாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம், களியக்கா விளை, வேதாரண்யம், ஓசூர், கூடலூர் ஆகிய ஐந்து முனைக ளிலிருந்து மாநிலம் தழுவிய பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு துவங்கிய பிரச்சார பயணத்திற்கு சங்கத் தின் மாநிலச் செயலாளர் சி.ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட தலைவர் கே. முத்துக்குமார், செயலாளர் ஏ.ஆர்.ஆசரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் சி.பரமேஸ்வரி, மாநிலத் துணைத் தலைவர் மு.சீனிவாசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட கிளை பொருளாளர் தங்கராஜ் வாழ்த் துரை வழங்கினார்.
இதனையடுத்து, உதகை வந்த பயணக் குழுவிற்கு பிங்கர் போஸ்ட் பேருந்து நிலையம் அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எல்ஐசி ஊழி யர் சங்க நிர்வாகி கோபால் வாழ்த் துரை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத் தில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜெ.ஆல்தொரை, மாவட்ட வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாவட்ட தலைவர் ஆர். குமாரராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே. ஆனந்தன், மாவட்ட கருவூல கணத் குத் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும், கூடலூர், உதகை, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதி களிலுள்ள மக்கள் கூடும் பகுதி களில் பிரச்சாரம் இயக்கம் நடை பெற்றது. பிரச்சார பயணக் குழு விற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமான வரவேற்பினை வழங்கினார்கள்.