திருச்செங்கோடு, ஜன.3- திருச்செங்கோட்டில் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயற்சி வகுப்பு ஞாயிறன்று தொடங்கியது. காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் இல வச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி ஞாயிறன்று திருச்செங்கோட் டில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.கணேஷ் பாண்டியன் தலைமை வகித் தார். மைய ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வர வேற்புரையாற்றினார். இந்த பயிற்சி வகுப்பிற்கு ரூ.11 ஆயிரம் மதிப்பிலான ப்ரொஜெக்டர் கருவியினை கணேஷ் குமார் வழங்கினார். இதைத்தொடர்ந்து போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளும் வழிமுறைகள் குறித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் எடுத்துரைத் தார். நிறைவாக வழக்கறிஞர் ஜி.கோபி நன்றி கூறினார். மேலும், இந்த பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மலை 5 மணி வரை நடைபெறுகிறது.