districts

img

அவிநாசியில் வாலிபர் சங்கம் சார்பில் விளையாட்டு விழா

அவிநாசி,ஜன.18- அவிநாசி ஒன்றியத்தில் இரண்டு இடங்க ளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற் றது. அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் அவினாசி பேரூராட்சி உள்ளிட்ட இடங்க ளில் பொங்கல் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மியூசிக் சேர், ஓட்டப்பந் தயம், சாக்குப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ஒன்றியத் தலைவர் சந்தோஷ்,  ஒன்றியப் பொருளாளர் வடிவேல், மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், அவிநாசி பேரூராட்சி கிளை நிர்வாகிகள் சண்முகம், ரவீந்திரன், வடுகபாளையம் கிளை நிர்வாகி கௌதம், செந்தில்குமார் உட்பட வாலிபர் சங்கத்தின் முன்னாள் நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.