திருப்பூர், பிப். 24 – இந்தியத் தொழிற் சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டத் தலைவராக ஜி.சம்பத் தேர்வு செய்யப்பட்டுள் ளார். திருப்பூர் மாவட்ட சிஐடியு மாவட்டக் குழுக் கூட்டம் திங்களன்று திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தால், அவருக்கு பதி லாக புதிய தலைவ ரைத் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது. மாவட்டக்குழுக் கூட் டத்தில், ஏற்கெனவே சங்கத்தின் மாவப் டப் பொருளாளராகவும், திருப்பூர் பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளராக வும் செயல்பட்டு வரும் ஜி.சம்பத், புதிய மாவட்டத் தலைவராகத் தேர்வு செய்யப்பட் டார். அதேபோல் மாவட்டப் பொருளாள ராக, இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராக இருக்கும் ஜெ.கந்த சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.