districts

கூடலூர் மக்களின் தொடர் துயரங்களின் தீர்வைத்தேடி... - ஏ.யோகண்ணன்,

தமிழகத்தின் கேரளா மற்றும் கர்நா டகா மாநிலங்களுடன் எல்லையை பங் கிடும் ஒரு சட்டமன்ற தொகுதி கூடலூர். 1967 இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. 1887 வரைக்கும் கூடலூர் மதராஸ் மாநிலத் தின் மலபார் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் இப் பகுதி நீலகிரி மாவட்டத்தில் இணைக்கப்பட் டது. பிரிட்டீஷாரின் காலத்தில் துவங்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் பணியாற்ற கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிறப்பகுதி களிலிருந்து தொழிலாளர்கள் வரவழக்கப்பட் டது முதல் குடியேற்றமாகும். பனியர், காட்டு  நாயக்கர், பெட்டக் குறும்பர் (ஊராளி) முள்ளக் குறும்பர் போன்ற பழங்குடி மக்களும், வய நாடன் செட்டி, மான்ட்டா டன் செட்டி போன்ற வர்களும் இங்கே வசித்து வந்தனர்.  பெரும்பான்மை நிலங்களும் நிலம்பூர் கோவிலகம், நடுவத்துமன, நெல்லியாளம் ராணி போன்ற ஜமீந்தார்களின் உடமையில் இருந்தது. 1969இல் அமலுக்கு வந்த தமிழக அரசின் ஜன்மம் அபோளீஷ் மென்ட் சட்டம்  நிலத்தின் உடமையாக தமிழக அரசை மாற்றி யது. 1950 காலகட்டத்தில் நாட்டில் பஞ்சம், பட் டினி அதிகரித்தபோது, மத்திய அரசின் Grow more food என்ற அறைகூவலின் அடிப்படையில் இரண்டாம் குடியேற்றம் என்பது கூடலூரில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையின ரும் கேரளா மாநிலத்தில் இருந்து குடியேறி யவர்களாக இருந்தனர். சிறப்பான முறையில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் மீது இக்காலத்தில் அரசு பழி வாங்கும் நடவடிக்கைகள் 1969 - 70 கால கட்டத் தில் ஆரம்பித்தது. நிலவெளியேற்றம், வீடுகள் தீக்கிரையாக்குதல், பயிர்கள் வெட்டி சாய்த்தல், துப்பாக்கிச்சூடு, தடியடி, பொய் வழக்கு  போட்டு சிறையனுப்புதல் போன்றவை நிகழ் தது. இதற்கெதிராக விவசாய சங்கத்தின் தலை மையில் மக்கள் போராட்டங்கள் நடைபெற் றன. நூற்றுக்கணக்கான விவசாயிகள் சிறை யில் அடைக்கப்பட்டனர். அச்சம் காரணமாக பலரும் ஓடி ஒளிந்தனர். ஆண்கள் தலைமறை வாக போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெண் களும் குழந்தைகளும் போலீஸ் மற்றும் வனத் துறைக்கு பயந்து இரவு வீடுகளில் தங்காமல் அடர்ந்த காப்பித் தோட்டங்ளில் தங்கிய அவ லம் நிகழ்ந்தது. இதேநேரத்தில், இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக பலத்த போராட் டங்களும் நடைபெற்றது இக்காலத்தில், ஏழைகளின் தோழன் என்று  அனைவராலும் போற்றப்பட்ட நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவர் தோழர் ஏ.கே.கோபாலன் நேரடியாக கூடலூர் பகுதிக்கு வந் தார். விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, போராடுவதற்கான வியூகத்தை யும், வீரத்தையும் கற்றுத்தந்தார். பின்னர், ஏ.கே.ஜி சென்னை சென்று தமிழக முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, கூட லூர் விவசாயிகளின் உண்மை நிலை குறித்து விளக்கினார். இதனைத்தொடர்ந்து, கலைஞர்  கூடலூர் விவசாயிகளுக்கு 3 ஏக்கர் பட்டா வழங்க உத்தவு பிறப்பித்தார். 1972-75 ஆம் காலத்தில் 6000 குடும்பங்களுக்கு 18000 ஏக் கர் பட்டா வழங்கப்பட்டது. அதிகாரிகளின் பார பட்சமும் ஊழலும் காரணமாக பெரும்பான்மை யான ஏழை விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். 80088 ஏக்கர் நிலத்தில் மிச்சமுள்ள நிலம் இன் னும் விவசாயிகள் கைவசமே உள்ளது. இதற்கு பட்டா வழங்க வேண்டுமென்ற போராட்டம் 50  ஆண்டுகளுக்குமேலாக நாளது தேதி வரை யில் தொடர்கின்றது.

இதே காலத்தில் மாறி, மாறி வந்த தமிழக அரசு, மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் பலவிதமான கருப்புச் சட்டங்கள் கூடலூர் விவசாயிகள் மீது திணித்தது. 1989 இல் 1168 பட்டா தடைசட்டம், 1991 ல் பெல்ட் ஏரியா திட்டம், 2005 யானை வழித்தடம் (மசினகுடி)  2006 புலிகள் காப்பகம், 2009 TNPTF அமலாக் கம், 2019 Sec 16A, மீண்டும் 2024 யானை வழித் தட விரிவாக்கம் (4 வழித்தடங்கள் அதிகமாக வரைவு அறிக்கை) இச்சட்டங்கள் மூலம் கூட லூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மசினகுடி, ஸ்ரீமதுரை, முது மலை, நெல்லாக் கோட்டா, சேரங்கோடு போன்ற சிற்றுராட்சிகளிலும், கூடலூர், நெல்லி யாளம் நகராட்சிகளிலும், ஒா வேலி, தேவர் சோலை பேரூராட்சிகளும் கடுமையாக பாதிக் கப்பட்டது. வீடு கட்ட தடை, மின் இணைப்புக்கு தடை, நிலம் விற்க, வாங்க தடை என அன்றாட வாழ்க்கை நடத்திச்செல்ல முடியாத அளவிற் கான துயரங்களை கூடலூர் மக்கள் மீது ஆட்சி யளர்கள் ஏவிவிட்டனர். தமிழகத்தில் மட்டு மல்ல, உலகெங்கிலும் இல்லாத கொடுமை அரங்கேறியது. ஒவ்வொரு 5 ஆண்டு காலத் திலும் கூடலூர் மக்களை பாதிக்க கூடிய வகை யில் ஏதோ ஒரு கறுப்புச்சட்டம் அமலுக்கு வந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்த போராட்டங்களும் வீரியத்துடன் இம்மண்ணில் எழுந்துள்ளது.  கூடலூர் மக்களின் முக்கிய பிரச்சனைக ளாக, கைவச நிலத்திற்கு பட்டா, வனவிலங்கு பிரச்சினை, வளர்ச்சி திட்டப்பணிகள் முக்கிய மானவை. அடிப்படை பிரச்சினையான, கைவச நிலத்திற்கு பட்டா கிடைக்க செய்தால் 90 சதவிகித கூடலூர் பிரச்சினைகளுக்கு தீர்வு  எட்டிவிடும். இதனால்தான் தமிழ்நாடு விவசாய சங்கம் கடந்த 50 ஆண்டு காலமாக இதே  கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்  தொடர்ந்து வருகிறது.

கடந்த 2024 ஜுன் 15,16 தேதிகளில் அகில இந்திய கிசான் சபா பொதுச் செயலாளரும் விவசாய அமைப்புகளின் தில்லி போராட்டத் திற்கு தலைமை தாங்கியவருமான தோழர் விஜூகிருஷ்ணன், நிதிச்செயலாளர் பி. கிருஷ்ணபிரசாத் மற்றும் நிதீஷ் ஆகியோர் கூட லூர் வந்தனர். இவர்கள் தமிழ்நாடு விவசாய சங் கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் கூடலூர் பிரச்சனை குறித்து கள ஆய்வை மேற்கொண்ட னர். மசினகுடி ஒா வேலி, முதுமலை, ஸ்ரீமதுரை,  தேவர்சோலை, சேரம்பாடி, நெல்லாக்கோட்ட போன்ற பகுதிகவில் விவசாயிகள், தொழிலா ளர்கள், பொது மக்கள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரயும் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வின் முடிவில் கண்டறியப் பட்டவை யாதெனில்… 1. கூடலூர் நிலப்பிரச்சினைக்கு தீர்வுகாண விவசாயிகள், தொழிலாளர் தலைமையில் அனைத்து பகுதி மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2. நிரந்தரமான தீர்வுக்கு கைவச நிலத்திற்கு பட்டா என்ற முழக்கத்தை முன்னிருத்தி போராட் டங்கள் வடிவமைக்க வேண்டும். 3. உலகில் வேறெங்கும் இல்லாத வகை யில் காடும், நாடும் கலந்து கிடக்கிறது. காடு  காடாகவும் நாடு நாடாகவும் பிரிக்க வேண்டும். 25 சென்டு, 1 ஏக்கர், 2 ஏக்கர் என ரிசர்வ் பாரஸ்ட் என்பது வினோதமாக இருக்கிற செயல். இது முற்றிலும் திருத்தப்பட்டு மனிதன் வாழ் விடமும் காடும் தனித்தனியாக பிரித்தாக வேண்டும். 4. மனிதர்கள் வாழும் இடத்திற்கு விலங்கு கள் வராமல் தடுப்பதற்கு அகலிகள் (trench)  அமைத்து ஏதிர் புறம் 4 மீட்டர் உயரத்தில் வேலி கள் அமைக்க வேண்டும். ஒரு விலங்கும் 4 மீட்ட ருக்கு மேல் குதிக்காது என்பது நிருபிக்கப்பட் டது என்பதால். பெரிய விலங்குகள் அகழியை  தாண்டாது என்பதும், சிறு மிருகங்கள் வேலியை  தான்டாது என்பதாலும் பொதுமக்கள் விவசாயி கள் உயிர் சேதமும், பயிர் சேதமும் இல்லாமல் வாழலாம். இதற்கு தேவையான தொகை ஒரு  கிலோ மீட்டருக்கு ரூ.45 லட்சம் மட்டும் தான்.  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இதற் காக பயன்படுத்தலாம்.

5. வனவிலங்குகள் நாட்டுக்குள் வருவதற் கான பிரதான காரணம் அவைகளுக்கான உணவும், குடிநீரும் காட்டுக்குள் இல்லை  என்பது தான். இதை காட்டுக்குள் உருவாக்க  வேண்டும். காட்டிலுள்ள தேக்கு,(Teak) கிராண் டீஸ், (Eucalyptus) மஞ்சள் கொன்ன, (Senna ) பார்த்தீனியம், உண்ணிச்செடி, (Lantana) போன்றவை அகற்றப்பட வேண் டும். இதற்காக ஊராட்சிகளிலுள்ள கிராமங்க ளுக்கு 100 ஹெக்டேர், 200 ஹெக்டேர் என்ற அள விற்கு நிலத்தை பிரித்து கொடுக்க வேண் டும். இயற்கைகையை பாதுகாக்கும் நாட்டு  மரங்கள் வளர்க்க வேண்டும். தண்ணீர் வசதி  ஏற்படுத்த திட்டம் வகுக்க வேண்டும். இவை அனைத்தையும் நூறு நாள் வேலை திட்டம் போன்ற திட் டங்களோடு இணைக்கலாம். வனத்திற்குள் நடக்கும் வேலைகள் Social Auditக்குள் ளாக்க வேண்டும்.  6. புதியதாக அமைக்கப்போகும் யானை வழித்தடங் களை முற்றிலுமாக அரசு கைவிட வேண் டும். இவை விஞ் ஞான ரீதியான எந்த ஆய்வும் நடத்தாமல் உருவாக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல, அந்தப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் அதிகாரி கள் முன்னெடுத்த யோசனை.காலங்கால மாக யானைகள் போய் வருவதுண்டு. அது  குறிப்பிட்ட பகுதிகளில் தான் செல்லும் என்பது ஆதாரமற்ற செயல். பாரம்பரியமாக இருந்த  வழித்தடங்களில் ஏதேனும் கட்டமைப்புகள் இருந்தால், உரிய நஷ்ட ஈடு வழங்கி மாற்றப் பட வேண்டும். 7. வன விலங்குகளால் கொல்லப்படும் மனித உயிர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி தொகை உறுதி செய்ய வேண்டும். கூடலூரில் மட்டும் இதுவரை கடந்த 2010 இல் இருந்து 114 மனித உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் கொல் லப்பட்டுள்ளன. பயிர்கள் சேதமடைந்துள் ளன. இவைகளுக்கெல்லாம் உரிய நஷ்ட  ஈட்டை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவையெல்லாம் தமிழக அரசும், ஒன்றிய அரசும் விவசாய அமைப்புகளோடு கலந்தா லோசித்து அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நீலகிரி மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது. இதுவே கூடலூர் மக்களின் கணக்கிலடங்கா துயரங்க ளுக்கு இதுவே தீர்வு.