districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

லிப்ட் தருவதாகக்கூறி பணம் பறிப்பு

நாமக்கல், செப்.4- லிப்ட் தருவதாகக்கூறி, ஓய்வுபெற்ற செவிலியரி டம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச்சென்ற சம்பவம் நாமக்க லில் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மனைவி வசந்தகுமாரி (61). இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலிய ராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இத்தம்பதியினருக்கு ராசிபுரம் அருகே உள்ள பாலபாளையம் பகுதியில்  வீடு உள்ளதாகவும், அதன் பராமரிப்பு பணி நடைபெற்று  வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலப்பாளை யம் பகுதியில் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ முகாமா னது புதனன்று நடைபெற்றது. அற்போது, தனது வீட் டிற்கு குடிநீர் இணைப்பு மற்றும் பல்வேறு சேவைக ளுக்கு மனு அளிப்பதற்காக, புதன்சந்தை பகுதியிலி ருந்து பாலப்பாளையம் செல்வதற்காக பேருந்து நிலை யத்தில் வசந்தகுமாரி காத்துக் கொண்டிருந்தார். அப் போது, அவ்வழியாக வந்த பெண் ஒருவர், வசந்த குமாரிக்கு லிப்ட் தருவதாகக்கூறி, தனது இருசக்கர  வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் மூணுசாவடி சிவன் கோவில் அருகே உள்ள செம்மாம் பட்டி ஏரி பகுதியில், இருசக்கர வாகனத்தை சாலை யோர பள்ளத்தில் கவிழ்த்துவது போல் நடித்து, வசந்த குமாரியை கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்படவே, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7  பவுன் தங்கச் சங்கிலியை அந்த பெண் பறிக்க முயன்றுள் ளார். ஆனால், நகையை அவர் இழுத்து பிடித்துக் கொண்டுள்ளதால், ஆத்திரமடைந்த அந்த பெண் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி தூவி, வசந்தா குமரி கையில் கொண்டு வந்த ரூ.50 ஆயிரத்தை பறித் துச் சென்றுள்ளார். இதன்பின் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

நாமக்கல், செப்.4- எருமபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக, மது விலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் வியாழ னன்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பேருந்து நிலை யத்தில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து  விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 5.690 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இத னையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த  போலீசார், மூன்று பேரையும் நாமக்கல் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினர். அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டி ருந்தது எருமபட்டியைச் சேர்ந்த முகமது அப்துல் ரகு மான் (25), பூவரசன் (19), விருதுநகரைச் சேர்ந்த  முகமது அப்சர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.

முழு சந்திர கிரகணத்தை காண அறிவியல் இயக்கம் ஏற்பாடு

திருப்பூர், செப். 4 - செப்டம்பர் 7 ஆம் தேதி முழு சந்திர  கிரகணத்தைக் காண திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்க ளிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழும்  போது வானில் தோன்றும் இயற்கை யான நிழல் மறைப்பு என்பதை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில் செப்.7ஆம் தேதி தென்படும் முழு சந்திர  கிரகணத்தைப் பொது மக்களிடம் வானி யல் திருவிழாவாக கொண்டாடத் திட்ட மிட்டப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு அறிவியல்  இயக்க திருப்பூர் மாவட்டச் செயலா ளர் கௌரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சூரியனுக்கும், நிலவுக்கும் இடை யில் பூமி வரும்போது, பூமியின் நிழல்  நிலவு மீது விழுவதால் சந்திர கிரக ணம் ஏற்படுகிறது. வரும் செப்.7 ஆம்  தேதி ஞாயிறன்று இரவு 9:57 மணிக்குத்  தொடங்கி, செப். 8 ஆம் தேதி நள்ளிரவு  00.26 மணி வரை சந்திர கிரகணம் நடை பெறும். சரியாக 11.01 -12.23 மணி இடை வெளியில்  முழு சந்திர கிரகணம் நடை பெறும். இது சற்று வித்தியாசமாக சூரிய னில் இருந்து வரும் ஒளி பூமியின் வளி மண்டல மேற்பரப்பில் ஊடுருவி அதிக  அலைநீளம் கொண்ட வண்ணங்களான  சிவப்பு, ஆரஞ்சு நிலவின் மீது படும். அப் போது அடர் சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றும்.  இந்த சந்திர கிரகணத்தில் எந்த கதிர் வீச்சும் இல்லை. அதை வெறும் கண் களால் பார்க்கலாம். இதற்காக, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக்குழு செப்.7 அன்று பல்வேறு  இடங்களில் மாலை 6 மணி முதல் சந்திர  கிரகண நிகழ்வை வானியல் திருவிழா வாக நடத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர் தெற்கு டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே. ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகிறது. மேலும் திருப்பூர் வடக்கு  தோட்டத்துப்பாளையம், பல்லடம்  உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் அறிவியல் இயக்கத் தன்னார்வலர்கள்,  கருத்தாளர்கள் ஏற்பாட்டில் சந்திர கிரக ணத்தை பார்ப்பதற்கும், திரையிட்டு படக்காட்சி மூலம் விளக்குவதற்கும் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வானில்  தோன்றும் இந்த அதிசய நிகழ்வை அனைவரும் காணலாம் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் களை அணுகலாம், தொடர்பு எண்கள்:  90953 39097,97900 61482. அறிவிக்கப் பட்டுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த கரடி

உதகை, செப்.4- மஞ்சூர் அருகே அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த கரடி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தீவன பற்றாக்குறை, வன விலங்கு கள் எண்ணிக்கை அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங் களுக்காக கடந்த சில நாட்களாக வனப்பகுதியிலிருந்து வெளி யேறும் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. மஞ்சூர் பஜாரில் கடந்து சில நாட்களாக இரவு நேரங்க ளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், புத னன்று இரவு மஞ்சூரில் உள்ள அருகே அம்பேத்கர் நகரில்  ஏசுபாய் வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை தேடி  வீட்டை சேதப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், ‘கரடி ஊருக்குள் வந்திருப்பதால் பொதுமக்கள்  இரவு நேரங்களில் வெளியில் வர அச்சமாக உள்ளது.  வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்துபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர். வனச்சரகர் செல்வகுமார் கூறுகையில், பூட்டியிருந்த வீட் டில் ஆட்கள் இல்லாததால் கரடி வீட்டுக்குள் சென்றிருக் கிறது. ஆட்கள் இருந்திருந்தால் கரடி உள்ளே வந்திருக் காது. இருந்தாலும் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகி றோம், என்றார்.

மண் குவியல் அகற்றம்

நாமக்கல், செப்.4- தொடர் மழையால் சாலைத்தடுப்புகளில் தேங்கிய மண் குவியலை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் தற் போது, நாள்தோறும் மழை பெய்து வருவதால், பிரதான சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகி றது. இச்சாலையில் காவல் நிலைய சாலை முதல் கத்தேரி  பிரிவு வரை 2 கி.மீ தூரத்திற்கு சாலைத்தடுப்புகள் (டிவை டர்கள்) வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே மழைநீரால் மண் குவியல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.  எனவே, இந்த மண் குவியல்களை அகற்றி, விபத்துகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறைப் பணியாளர்கள், தேங்கியுள்ள மண் குவியல்களை அகற்றும் பணியில் ஈடு பட்டனர்.