தருமபுரி, அக்.9- குழந்தைகளுடன் பேச சொற்களை திரட்ட வேண்டிய பெற்றோர்கள், புத்தகங்களை படிக்க வேண்டும் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா விழா தருமபுரி மதுராபாய் சுந்தரராஜ் ராவ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரு கிறது. இந்நிகழ்வில் ஒருபகுதியதாக செவ்வா யன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். பேராசிரியர் கா.சிவப்பிரகாசம் வர வேற்றார். ‘தேர்ந்து படி’ என்ற தலைப்பில் எழுத் தாளரும், தமுஎகச மாநில பொதுச்செயலாளரு மான ஆதவன் தீட்சண்யா பேசுகையில், பெண் கள் சமத்துவமடைய 250 ஆண்டுகள் ஆகிறது என ஐநா சபை கூறுகிறது. இதனை சமப்படுத்த வேண்டும் என்றால் பாலின சமத்துவத்தை சொல் லும் புத்தகங்களை நாம் படிக்க வேண்டும். நாம் குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுகிறோம் என்று சொல்லி வருகிறோம். நம்மை விட சிறந்த வாழ்க்கையை குழந்தைகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். நம்நாட்டில் 18 வயதிற்குள் 45 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். உலகத் திலேயே அதிக இளைஞர் கொண்ட நாடு இந்தியா வும், சீனாவுமாகும். இதில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் 23 கோடி பேர் உள்ள தாக சொல்கின்றனர். தங்களது குழந்தைகள் நன் றாக படித்து வேலைக்கு சென்று, கை நிறைய சம் பாதிக்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்பு கின்றனர். குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம் எதுவென்று சொன்னால் கண்ணாடி, ஜன்னல், சருக்கி திறக்கும் கதவு. குழந்தைகள் வளர்ப்பில் முதல் ஆயிரம் நாட்கள் கவனிக்கத்தக்கது என யுனிசெப் சொல்கின்றனர். இந்த ஆயிரம் நாட் களில் எவ்வளவு சொற்கள் சேறுகிறது என்பதை பொறுத்துதான், குழந்தைகள் பிற்காலத்தில் ஆளுமைகளாக வருவார்கள் என தெரிவிக்கின் றனர். புதிய சொற்களை பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லை யென்றால் சக குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியே விளையாட வேண்டும். குழந்தைகள் ஒருவரை ஒருவர் தொட்டு, கட்டிப்பிடித்து விளை யாட வேண்டும். குழந்தைகளுடன் பேச பெற்றோர் சொற் களை திரட்ட வேண்டும். அது எப்படி கிடைக்கும் என்றால் புத்தகம் படிக்க வேண்டும். நீங்கள் வாழ்நாளில் கண்டிராத பண்பாடு, கொண்டாட் டங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. நீங்கள் வாழ் நாளில் அனுபவிக்காத பல்வேறு தொகுப்புகள் புத்தகத்தில் உள்ளன. இதையெல்லாம் படித் தால் தங்களையும் வளப்படுத்திக் கொண்டு, குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கலாம், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியினை ஆசிரி யர் சின்னக்கண்ணன் ஒருங்கிணைத்தார். செந்தில் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக அலுவலர் சக்திவேல், கவிஞர் சம்பத்ஜி, வழக்கறிஞர் மாதேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“நம்பிக்கை சுடர்” என்ற தலைப் பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசு கையில், உலகம் முழுவதும் அறி வியல் பார்வையை உருவாக்குவது முக்கிய நோக்கமாகும். ஆதாரமற்ற கட்டுக்கதைகள் ஆண்டாண்டு காலம் இருந்து வருகிறது. பொய் களும் உலவி வருகின்றன. அது மட்டுமல்லாமல் தற்போது, பழைய காலம் என பழமை வாதம் பேசி வரு கின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டித் தேர்வு எழுதுகின்றனர். அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம், அரசு அதிகாரம் மூலம் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கின்றனர். தற்போது தமிழகம் பொருளாதாரம், கல்வி, மருத்துவம், அறிவியல் பார்வை என கடந்த நூற்றாண்டுகளில் மிக பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அன்று, மக்கள் தொகையில் ஒரு பகுதி காலரா நோயினால் இறந்தனர். ஒரு பகுதி மக்கள் அடிமையாக இருந்தனர். அறிவியல் தான் தமிழனை மீட்டது. அறி வியல் தான் எல்லோருக்கும் சமூகநீதி கொண்டுவந்தது. அறிவியல் தான் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது. கல்வியாலும் அறிவியல் பார்வையா லும் இன்று தமிழன் உயர்ந்து நிற்கிறார். எனவே அறிவியல் பார்வைக்கு எதி ரானவர்களை புறந்தள்ள வேண்டும், என்றார்.